அந்தர்யாமியாகிய கடவுள், உள்ளன்புடைய ஞானிகளுக்குப் புலப்படு வனேயன்றி மனத்தூய்மையில்லாத அஜ்ஞாநமயக்கமுடையார்க்குப் புலனாகானென்பது, பின்னிரண்டடியில் விளங்கும். "அவ மலையார்" என்பதற்கு - வீணான மயக்கத்தை யுடையவர்களென்று உரைப்பாருமுளர். மால் - மயக்கம்: ஐ - சாரியை. "மாலையான்" என்று பாடமோதி, வீணெண்ணங்களின் தொடர்ச்சியையுடைய நான் என்று உரைப்பர் ஒருசாரார். (77) | 78. | சீதங்கொள் சாரலினுஞ் சீர்மறையோ ரில்லிடத்தும் | | வேதங்க ணால்வளரும் வேங்கடமே - போதன் | | சிரித்துப் புரந்துடைத்தான் றேவரொடு மண்டம் | | விரித்துப் புரந்துடைத்தான் வெற்பு. | (இ - ள்.) சீதம் கொள் சாரலினும் - குளிர்ச்சியைப் பெற்ற அம்மலைப் பக்கங்களிலும், வே தம் கணால் வளரும் - மூங்கில்கள் தம்முடைய கணுக்க ளோடு வளரப்பெற்ற; சீர் மறையோர் இல் இடத்தும் - சிறந்த அந்தணர்களுடைய வீடுகளிலும், வேதங்கள் நால் வளரும் - நான்குவேதங்களும் (ஓதப்பட்டு) வளர்தற்கு இடமான: வேங்கடமே -,- போதன் - பிரமனும், சிரித்து புரம் துடைத்தான் - நகைத்துத் திரிபுரத்தை அழித்தவனான சிவனும், தேவரொடும் - மற்றைத் தேவர்களும் ஆகிய அனைவருடனே, அண்டம் - அண்டகோளங்களை, விரித்து - வெளிப்படுத்தி (படைத்து), புரந்து - காத்து, உடைத்தான் - அழிக்குந்தன்மையனான திருமாலினது, வெற்பு - திருமலை. வே - வேய் என்பதன் விகாரம். கணால் - கண்ணால்: தொகுத்தல்; கண் - கணு: இதில் ஆல் என்னும் மூன்றனுருபு, உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. சீர் - ஸ்ரீ என்னும் வடமொழியின் சிதைவென்பர். வேதம் என்ற சொல் - (நன்மைதீமைகளை விதிவிலக்குகளால்) அறிவிப்பது என்று பொருள்படும்; வித் - அறிவித்தல். வேதங்கள் நால் - இருக்கு, யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. நால் - நான்கு என்பதன் விகாரம். பிரம ருத்தி ரேந்திராதி தேவர்களுடனே எல்லா அண்டங்களையும் படைத்துக் காத்து அழிப்பவன் திருமாலென்பது, பிற்பாதியில் விளங்கும். உடைத்தான் என்பதில், இடைநிலை காலமுணர்த்தாது தன்மையுணர்த்தும் போதன் - திருமாலின் நாபித்தாமரைமலரில் தோன்றியவன்; போது - பூ. (78) | 79. | நன்கோடு போலுமுலை நாரியருஞ் சண்பகத்தின் | | மென்கோடுங் கற்பகஞ்சேர் வேங்கடமே - வன்கோடு | | கூரிருவ ராகனார் கோகனகை பூமியென்னு | | மோரிருவ ராகனா ரூர். | (இ - ள்.) நல் கோடு போலும் முலை நாரியரும் - அழகிய யானைத்தந்தத் தைப்போன்ற தனங்களையுடைய மாதர்களும், கற்பு, அகம் சேர் - பதிவிரதா தருமம் மனத்தில் அமையப்பெற்ற: சண்பகத்தின் மெல் கோடும் - சண்பக மரத்தினது அழகிய கிளைகளும், கற்பகம் சேர் - (மிக்க உயர்ச்சியால் தேவ |