பக்கம் எண் :

472திருவேங்கடமாலை

81.நாரியர்தங் கூந்தலினு நாலு மருவியினும்
வேரினறுஞ் சாந்தொழுகும் வேங்கடமே - பாரினுளா
ரற்பசுவர்க் கத்தா ரறிவரியார் முன்மேய்த்த
நற்பசு வர்க்கத்தார் நாடு.

(இ - ள்.) நாரியர்தம் கூந்தலினும் - மாதர்களுடைய கூந்தலினின்றும், வேரி நறு சாந்து ஒழுகும் - வாசனையையுடைய நல்லமயிர்ச்சாந்து ஒழுகப்பெற்ற: நாலும் அருவியினும் - கீழ்நோக்கி வருகின்ற நீரருவிகளிலும், வேரின் அறும் சாந்து ஒழுகும் - வேரோடும்அற்ற சந்தனமரங்கள் அடித்துக்கொண்டு ஓடிவரப்பெற்ற: வேங்கடமே -,- பாரின் உளார் - பூமியி லுள்ளவர்களாலும், அற்ப சுவர்க்கத்தார் - இழிவாகிய சுவர்க்கலோகத்தி லுள்ளவர்களாலும், அறிவு அரியார் - அறியமுடியாதவரும், முன் - முன்பு (கிருஷ்ணாவதாரத்தில்), மேய்த்த -, நல் பசு வர்க்கத்தார் - நல்லபசுக்களின் தொகுதியையுடையவருமான திருமாலினது, நாடு - திவ்வியதேசம்; (எ - று.)

"வேரினறுஞ்சாந்து" என்ற தொடரின் முதற்பொருளில் சிறப்பு னக ரத்தைப் பொதுநகரமாக அமைத்துக்கொள்ளவேண்டும்; பொது நகரமும் சிறப்புனகரமும் ஒலிவடிவில் அபேதமாயிருத்தல்பற்றி, இவ்வாறு புணர்த்தினார். இங்ஙனமே வரும் மற்றைப்பாடல்களும் காண்க. மயிர்ச்சாந்து - மயிரிற் பூசப்படும் வாசனைக்கலவை; வாசனைத் தைலமுமாம். நாலும் என்ற எதிர்காலப் பெயரெச்சத்தில், நால் - வினைப்பகுதி. மலையருவி வெள்ளத்தின் விசையால் அங்குள்ள சந்தனம் முதலிய மரங்கள் வேரோடு அறுத்துத் தள்ளப்பட்டு வருதல் இயல்பு . பாரினுளார் - மனிதர். சுவர்க்கத்தார் - தேவர். சிற்றின்பத்தையே யுடையதான சுவர்க்கம் நிரதிசயப்பேரின்பத்தையுடைய பரம பதத்தை நோக்க எளிமைப்படுதலால், "அற்பம்" எனப்பட்டது. அல்ப ஸ்வர்க்கம், பசுவர்க்கம் - வடசொற்றொடர்கள். கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்தபொழுது தான் வளர்கிற குலத்திற்கு ஏற்ப ஆநிரை மேய்த்தமை பிரசித்தம்.

(81)

82.மாதரார் கண்ணு மலைச்சார லுங்காமர்
வேதமாற் கஞ்செறியும் வேங்கடமே - பாதமாம்
போதைப் படத்துவைத்தார் போர்வளைய மாற்றரசர்
வாதைப் படத்துவைத்தார் வாழ்வு.

(இ - ள்.) மாதரார் கண்ணும் - மகளிர்களுடைய கண்களும், காமர் வேதம் மாற்கம் செறியும் - காமநூல்வழியைப் பொருந்தப்பெற்ற: மலை சாரலும் - மலைப்பக்கங்களும், காமர் வே தமால் கம் செறியும் - அழகிய மூங்கில்கள் தமது உருவத்தால் வானத்தை நெருங்கப்பெற்ற: வேங்கடமே -,- பாதம் ஆம் போதை - (தமது) திருவடிகளாகிய தாமரைமலர்களை, படத்து வைத்தார் - (காளியனென்னும் பாம்பின்) படத்தில் ஊன்றவைத்தவரும், போர் - யுத்தத்தில், மாறு அரசர் வளைய - பகையரசர்கள் வளைந்து கொள்ள,