பக்கம் எண் :

494திருவேங்கடத்தந்தாதி

குருகை - பாண்டிநாட்டுத் திருமால்திருப்பதி பதினெட்டில் ஒன்று. 'பல்லவந்தாதிசைவண்டார' என்ற அடைமொழி, ஆழ்வாரது திருவவதார ஸ்தலமான அத்திருக்குருகூரினது வளத்தை விளக்கும். தாது - பூந்தாது, மகரந்தப்பொடி. ஆழ்வார் தமதுபிரபந்தங்களிற்கூறிய தத்துவார்த்தங்க ளைக்கொண்டு பிறமதங்களாகிய யானைகளைச் செருக்கடக்கி அவற்றிற்குத் தாம் மாவெட்டியென்னுங்கருவிபோன் றவராய்ப் பராங்குசரென்று ஒரு திருநாமம்பெறுதல் தோன்ற 'பரசமயம்வெல்ல வந்து' என்றும், வேதம் அபௌருஷேயமும் நித்யமுமாய்ச் செய்யாமொழி யெனப்படுகிற சிறப்புத் தோன்ற 'ஆதிமறை' என்றும், ஆழ்வார் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்குவேதங்களின் சாரார்த்தங்கள் முறையே அமையத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்தாதி என்ற நான்குதிவ்வி யப்பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந்தருளி உலகத்தைஉய்வித்தமை தோன்ற 'மறை தமிழாற்செய்த' என்றும், ஆழ்வார் அஜ்ஞாநத்துக்குக்காரணமான சடமென்னும்வாயுவை ஒறுத்துஓட்டிச் சடகோபரென்று பெயர்பெற்றுப் பிறந்தபொழுதே தொடங்கித் தத்துவஞானவிளக்கம் என்றுங்குறைவற விளங்கப்பெற்ற ஞானக்கனி யாதல் தோன்ற 'வித்தகனே' என்றும் கூறினார். பின்பு 'தாதின்வழு' என்று முதனிலைக்குற்றங்களைத்தனியே எடுத்துக் கூறுதலால், முன்பு 'சொல்லவம்' என்றது, அவையொழிந்த மற்றைச் சொற்குற்றங்களின்மேல் நிற்கும். தாது - வினைப்பகுதியைக்குறிக்கும்போது, வடசொல். விண்டுவின், சம்புவின், இந்துவின் என்றாற்போல வடமொழிக் குற்றியலுகரம் உயிர்வரக் கெடாது தாதுவின் என வரற்பாலது, இங்குத் திரிபுநயம்நோக்கி, உயிர்வரினுக்குறள்மெய்விட்டோடி 'தாதின்' என நின்றது. பல்லவம், பரசமயம், ஆதி - வடசொற்கள். விளம்புதல் - சொல்லுதல். ஆர்தல் - தங்குதல். ஆர் குருகை - வினைத்தொகை.

நூல்.

1.திருவேங்கடத்துநிலைபெற்றுநின்றனசிற்றன்னையாற்
றருவேங்கடத்துத்தரைமேனடந்தனதாழ்பிறப்பி
னுருவேங்கடத்துக்குளத்தேயிருந்தனவுற்றழைக்க
வருவேங்கடத்தும்பியஞ்சலென்றோடினமால்கழலே.

(இ - ள்.) கடம் - மதத்தையுடைய, தும்பி - யானையாகிய கஜேந்திராழ்வான், உற்று - (முதலையினாற் பற்றப்பட்டுத்) துன்பமுற்று, அழைக்க - (ஆதிமூலமே யென்று) கூப்பிட, (அதனைத் துன்பந்தீர்த்துப் பாதுகாத்தற் பொருட்டு), வருவேம் அஞ்சல் என்று ஓடின - '(யாம் இதோ) வருகிறோம் (நீ) அஞ்சவேண்டா' என்று (அபயவார்த்தை) சொல்லிக்கொண்டு (தனது இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அவ்யானையினிடத்துக்கு) விரைந்து சென்ற, மால் - திருமாலினது, கழல் - திருவடிகள், - திருவேங்கடத்து - திருவேங்கடமலையில், நிலை பெற்று நின்றன - நிலையாக நின்றுள்ளன; சிறு