பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி495

அன்னையால் - சிறியதாயாகிய கைகேயியின் கட்டளையால், தரு வேம் கடத்து தரைமேல் நடந்தன - மரங்கள் வேகப்பெற்ற கடுஞ்சுரத்து நிலத்தின் மேல் நடந்துசென்றன; தாழ் பிறப்பின் உருவேங்கள் - இழிந்தபிறப்பின் வடிவத்தையுடைய எங்களது, தத்துக்கு - ஆபத்தை நீக்குதற்பொருட்டு உளத்தே இருந்தன - (எங்கள்) மனத்திலே வந்து எழுந்தருளியிருந்தன; (எ - று.) - ஏ - ஈற்றசை.

இது, பாதவகுப்பு என்னும் பிரபந்தத்துறைகூறியவாறாம்: இந்நூலின் 73 - ஆஞ் செய்யுளும் காண்க. பாதவகுப்பு - பிரபந்தத் தலைவனது திரு வடிகளின் சிறப்புக்களைக் கூறுவது; (இங்ஙனமே புயவகுப்பும் உண்டு. அது, பிரபந்தநாயகனது தோள்களின் சிறப்பைக் கூறுவது; இந்நூலின் 93 - ஆஞ் செய்யுளை நோக்குக.) "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்" என்றபடி சரணமடைகிற உயிர்கட்கெல்லாம் உஜ்ஜீவநகரமா யிருப்பது திருமாலின் திருவடி யாதலால், நூலின்தொடக்கத்தில் அதன் ஏற்றத்தை எடுத்துக்கூறின ரென்க.

திருவேங்கடத்தில் எம்பெருமான் நின்றதிருக்கோலமாக எழுந்தருளி யிருத்தலால், "திருவேங்கடத்து நிலைபெற்றுநின்றன" என்றார். சீதாகல்யாண த்தின்பிறகு தசரதசக்ரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய யத்தனிக்கையில், மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி தன் கொழுநரான தசரதரை நோக்கி முன்பு அவர்தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யைமகனானஇராமனைப் பதினான்குவருஷம் வனஞ்செலுத்தவும் வேண்டுமென்றுசொல்லி வற்புறுத்த, அதுகேட்டுவருந்தின தசரதர் சத்திய வாதியாதலால், முன்பு அவட்குவரங் கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும், இராமன்பக்கல் தமக்கு உள்ளமிக்க அன்பினால் அவ்வரத்தை நிறைவேற்று மாறு அவனைவனத்துக்குச் செல்லச்சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய் திறவாதிருக்கிறசமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து "பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருடம் உன்னைக் காடேறப்போகச்சொல்லுகிறார்" என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு அந்தமாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத்தனது தந்தைகொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்யபரிபாலநஞ் செய்தலினிமித்தம் இராமபிரான் இலக்குமணனோடும் சீதையோடும் அயோத்தியைவிட்டுநீங்கி நடந்துவனவாசஞ்சென்றன னென்றவரலாறு பற்றி, "சிற்றன்னையால் தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன" என்றார்; "தொத்தலர்பூஞ்சுரிகுழற் கைகேசிசொல்லால் தொன்னகரந்துறந்து துறைக்கங்கைதன்னைப், பத்தியுடைக்குகன்கடத்த வனம்போய்ப்புக்கு," "கூற்றுத் தாய்சொல்லக் கொடியவனம்போன, சீற்றமிலாதான்" என்றார் ஆழ்வார்களும். இராமபிரான் திருமாலின் திருவவதார மாதலால், அப்பெருமானது செய்கை இங்குத் திருமாலின்செய்கையாக ஒற்றுமைநயம்பற்றிக் கூறப்பட்டது; இதனை, இதுபோல வருமிடங்கட்கெல்லாங் கொள்க. பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐந்தும் எம்பெருமானது