பக்கம் எண் :

496திருவேங்கடத்தந்தாதி

ஐவகை நிலைகளாம். அவற்றில், இங்கு "திருவேங்கடத்து நிலைபெற்று நின்றன" என்றது, அர்ச்சாவதாரத்தை; அதாவது - விக்கிரகரூபத்தில் ஆவிர்ப்பவித்தல். "சிற்றன்னையால் தருவேங்கடத்துத் தரைமேல் நடந்தன" என்றது, விபவத்தை; அது, ராமகிருஷ்ணாதி அவதாரங்கள். "தாழ் பிறப்பினுருவேங்கள் தத்துக்கு உளத்தேயிருந்தன" என்றது, அந்தர்யாமித் வத்தை; அது - சராசரப்பொருள்களெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்துவசித்தலையும், அடியார்கள்மனத்தில் வீற்றிருத்தலையும் குறிக்கும். "உற்றழைக்கவருவேங்கடத்தும்பி யஞ்சலென்றோடின மால் கழல்" என்றது, பரத்வத்தோடு சௌலப்யத்தையுங் காட்டும்; பரத்வமாவது - பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை: சௌலப்யம் - அடியவர்க்கு எளியனதால், வியூகம் மேல்வருமிடத்துக் காண்க; அது, திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.

"தரு வேம்" என்ற அடைமொழி, காட்டின் கொடுமையை விளக்கும். தரு - வடசொல். வேம் - வேகும் என்ற செய்யுமெனெச்சத்து ஈற்று உயிர் மெய் சென்றது. தரை - தரா என்ற வடசொல்லின் விகாரம். ரூபமென்ற வடமொழி, உரு வெனச் சிதைந்தது. தாழ்பிறப்பின் உருவேங்கள் - இழிவான பிறப்புக்களிற் பிறத்தலையுடைய நாங்கள் என்றபடி, உருவேம் - உரு என்ற பெயர்ச்சொல்லின்மேற் பிறந்த தன்மைப்பன்மைக் குறிப்புவினையா லணையும்பெயர்; கள் - விகுதிமேல்விகுதி. தன்னைப்போன்ற அடியார்களை யுங் கூட்டிக்கொண்டு உளப்பாட்டுத் தன்மைப்பன்மையாக "தாழ்பிறப்பினு ருவேங்கள்" என்றார். தத்துக்கு என்ற நான்கனுருபு - பகைப்பொருளது: "துன்பத்திற்கி யாரே துணையாவார்" என்றவிடத்துப் போல. "மலர்மிசை யேகினான்" என்றபடி அன்பால் நினைபவரது உள்ளக்கமலத்தின் கண் எம் பெருமான் அவர்நினைந்தவடிவோடு விரைந்து சென்று சேர்தலால், "உளத் தேயிருந்தன" என்றார். உற்று - துன்புற்று; உறுஎன்ற பகுதியின் சம்பந்த முள்ள ஊறு இடையூறு என்ற சொற்களை நோக்குக. வருவேம் - தனித்தன் மைப்பன்மை. கடம் - வடசொல்; இந்த யானைக்கன்னத்தின்பெயர், அதனி னின்றுவழியும் மதநீர்க்கு இடவாகுபெயராம். தும்பி என்பதை இயல்பாக வந்த அண்மைவிளியாகவுங் கொள்ளலாம். அஞ்சல் - எதிர்மறையொருமை யேவல். ஓடின - பெயரெச்சம், மாலுக்கு அடைமொழி. இதனைப் பலவின் பால்முற்றாகக்கொண்டு உரைத்தலும் ஒன்று; இங்ஙனங்கொள்ளுமிடத்து, "வருவேம் கடத்தும்பி யஞ்சல்" என்றதைக் கழலின் வார்த்தையாக் கூறுதல், உபசாரவழக்காம். மால் - பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திரு மகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றையுடையவன். "கழல்" - பால்பகா அஃறிணைப்பெய ராதலால், 'நின்றன' முதலிய பலவின்பால்முற் றுக்களைக்கொண்டன. ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்கிற்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்தி லிருந்தே தீர்ப்பது ஸர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும்எளிதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யா மல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து