பிரிநிலை; அதனால், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றை யெல்லாத் திவ்வியதேசங்களினும் மிகப்பாங்கான வாஸஸ்தாநமென் னுங்கருத்து அமையும்: அங்ஙனஞ்சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். (2) | 3. | வேங்கடமாலையவியாமதிவிளக்கேற்றியங்க | | | மாங்கடமாலையமாக்கிவைத்தோமவன்சேவடிக்கே | | | தீங்கடமாலைக்கவிபுனைந்தோமிதிற்சீரியதே | | | யாங்கடமாலையிராவதமேறியிருக்குமதே. | (இ - ள்.) அங்கம் ஆம்கடம் ஆலையம் ஆக்கி - உறுப்புக்களையுடையதான (எமது) உடம்பைத் திருக்கோயிலாக அமைத்து, அவியா மதிவிளக்கு ஏற்றி கெடாத அறிவாகிய திருவிளக்கை (அங்கு) ஏற்றி, வேங்கடம் மாலை வைத்தோம். திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலை (அவ்வுடம்பினுள் அந்தக்கரணமாகிற மனமாகிய கர்ப்பகிருகத்தில்) எழுந்தருளப்பண்ணி வைத்தோம்; தீங்கு அட - (எமது) பிறவித்துன்பங்களை (அப்பெருமான்) அழிக்குமாறு, அவன் சேஅடிக்கே கவி மாலை புனைந்தோம் - அப்பரமனுடைய செவ்விய திருவடிகளிலே பாமாலையாகியபூமாலையைத் தொடுத்துச்சாத்தினோம்; யாம் -, கடம் மால் ஐயிராவதம் ஏறி இருக்கும் அது - மதமயக்கத்தையுடைய ஐராவதமென்னுந் தேவலோகத்துஅரசயானையின் மேல் (தேவராசனாய்) ஏறி வீற்றிருக்கப் பெறுவோமாயின் அதுவும், இதின் சீரியதே - இதைக்காட்டிலும் சிறந்ததாமோ? (ஆகாது என்றபடி); (எ - று.) - ஏ - ஈற்றசை. பேரின்பத்துக்கு இடமாகுமாறு எம்பெருமானை மனத்திற்கொண்டு தியானித்து அறிவுமுழுதையும் அவன்பக்கலிலேசெலுத்தி அவனதுசொரூ பத்தையுணர்ந்து அவன்மேற்பாமாலைபாடி இங்ஙனம் எல்லாக்கரணங்களாலும் அவனை வழிபடுதலினும், சிற்றின்பத்துக்கேஇடமான தேவேந்திரபதவி சிறிதும்சிறவாது என்பதாம். "இதின் சீரியதே" என்பதற்கு - இதுபோலச் சிறந்ததாகாதென்றும் பொருள்கொள்ளலாம். "இன்" என்ற ஐந்தனுருபு - முந்தின உரைக்கு உறழ்பொருவென்னும்எல்லைப்பொருளதும், இவ்வுரைக்கு உவமப்பொருவென்னும் ஒப்புப்பொருளதுமாம். இங்ஙனங்கூறியதனால், பகவத்கைங்கரியத்தில் இவ்வாசிரியர்க்கு அன்புமிக்கிருத்தல் நன்குவிளங்கும். "அன்பேதகளியா ஆர்வமேநெய்யாக, இன்புருகுசிந்தை யிடுதிரியா - நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு", "மார்வமென்ப தோர் கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி", "புனையுங் கண்ணி யனதுடைய வாசகஞ்செய்மாலையே,ழுழுசெய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை" என்ற ஆழ்வார்க ளருளிச்செயல்களை அடி யொற்றி, "அங்கமாங்கடமாலையமாக்கி அவியாமதிவிளக்கேற்றி வேங்கடமா லைவைத்தோம், அவன்சேவடிக்கே மாலைக்கவிபுனைந்தோம்" என்றார்.காற்றினால் அவியுந் தன்மையதாய்ப் புறவிருளையே யொழிக்கின்ற சாதாரண விளக்கினும் எவ்வாற்றாலும் நிலைகுலையாது அகவிருளையொழிக்கிற ஞானமா |