பக்கம் எண் :

500திருவேங்கடத்தந்தாதி

கிய சுடர்விளக்கிற்கு உள்ள விசேடந் தோன்ற, "அவியாமதிவிளக்கு" எனப் பட்டது; வேற்றுமையணி. அங்கமாங்கடமாலயமாக்கி - முகம் கை கால் முதலிய அவயவங்களோடுகூடிய உடம்பைக் கோபுரம் மதில் வாயில் முத லிய உறுப்புக்களோடுகூடிய கோயிலாகவும், அவ்வுடம்பின் அகத்துறுப்பாகிய மனத்தை அக்கோயிலினுள்ளே எம்பெருமானை யெழுந்தருளப்பண்ணுமிடமாகவுங் கருதுக. முதல்மூன்றடிகள், உருவகவணியின்பாற்படும்.

விளக்கு - (பொருள்களை) விளங்கச்செய்வது என்று பொருள்படுங் காரணக்குறி. அங்கம், கடம், ஆலயம், மாலா, ஐராவதம் - வடசொற்கள். கடம் - பானை; பலவகைப்பண்டங்கள் நிறைந்ததொரு கொள்கலம் போலுதலால், கடம்என்பது - உடம்புக்கு உவமையாகுபெயராக வழங்கும். ஆலையம், ஐயிராவதம் என்ற போலிகள், திரிபுநயம்பற்றியன. ஐராவதம் - இந்திரனது வெள்ளையானை; நான்கு தந்தங்களையுடையது. வைத்தோம், புனைந்தோம், யாம் - தனித்தன்மைப்பன்மைகள். சேவடி - செம்மை + அடி. திருவடி சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம். சீரியதே, ஏ - எதிர்மறை. மால் -மயக்கம்.

(3)

4.இருக்காரணஞ்சொல்லுமெப்பொருளின்பமுமெப்பொருட்குங்
கருக்காரணமுநற்றாயுநற்றந்தையுங்கஞ்சச்செல்வப்
பெருக்காரணங்கின்றலைவனுமாதிப்பெருந்தெய்வமு
மருக்காரணவும்பொழில்வடவேங்கடமாயவனே.

(இ - ள்.) இருக்கு ஆரணம் சொல்லும் - ருக் முதலிய வேதங்களாற் சொல்லப்படுகின்ற, எ பொருள் இன்பமும் - எல்லாவகைப் பொருள்களும் எல்லாவகையானந்தங்களும், எ பொருட்கும் கரு காரணமும் - எவ்வகைப் பொருள்களுக்கும் உற்பத்திகாரணமும், நல் தாயும் - நல்ல தாயும், நல் தந்தையும் - நல்ல தந்தையும், கஞ்சம் செல்வம்பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் - செந்தாமரைமலரில் வீற்றிருப்பவளும் ஐசுவரியசமிருத்தி நிரம்பிய வளுமான திருமகளின் கணவனும், ஆதி பெரு தெய்வமும் - (எல்லாத்தெய்வங்கட்கும்) முதன்மையான பெருமையையுடைய தெய்வமும், (ஆகிய அனைத்தும்), மரு கார் அணவும் பொழில் வட வேங்கடம் மாயவனே - வாசனையை யுடையனவும் மேகமண்டலத்தை யளாவுவனவு மான சோலைகளை யுடைய வடக்கின்கண்உள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலேயாம்; (எ - று.)

நான்குவேதங்களுள் இருக்குவேதம் முதல தாகையால், அதனைத் தலைமையாக எடுத்து "இருக்காரணம்" என்றார். "மெய்ப்பொருளின்பமும்" என்ற பாடத்துக்கு - உண்மைப் பொருளாகிய ஆநந்தஸ்வரூபமு மென்று பொருள்காண்க. "எப்பொருள்" என்பதில், எகரவினா - எஞ்சாமைப்பொருளது; உம்மை - முற்றும்மை. நற்றாய் - "தாயொக்கு மன்பின்" என்றபடி மக்களிடத்து அன்பிற்சிறந்த தாய். நற்றந்தை - "உயர்மிக்க தந்தை," "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்றபடி பிள்ளையின் உயர்ச்சி