மிகுதிக்குக்காரணமான தந்தை. தம்மக்கட்கு ஆவன வெல்லாவற்றையும் அன்போடு செய்துமுடித்து மகிழ்கிற தாய்தந்தையர்போல, எம்பெருமான் தன் அடியார்க்கு ஆவனவெல்லாம் அன்போடுசெய்து மகிழ்வனென்க. திருமழிசைப்பிரான் "அத்தனாகி யன்னையாகி" என்றாற்போல, "நற்றாயு நற்றந்தையும் மாயவனே" என்றார். "ஹிதமேப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய், ப்ரிய மேப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய், பிதாசெய்யும்உபகாரத்தை மாதாசெய் யமாட்டாள்; மாதாசெய்யும் உபகாரத்தைப் பிதா செய்யமாட்டான்: இரண்டு வகைப்பட்ட உபகாரத்தையும் அவன்தானே செய்யவல்லனாயிருக்கை; "ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதாச மாதவ:" என்றும், "உலகுக்கோர் முந்தைத்தாய்தந்தை" என்றும் சொல்லக்கடவதிறே" என்ற வியாக்கியாந வாக்கியங்கள் இங்கு நோக்கத்தக்கன. இது, ஸர்வவித பந்துவுமாயி ருத்தற்கு உபலக்ஷணம்; "எம்பிரானெந்தை யென்னுடைச்சுற்றம்" என்றார் திருமங்கையாழ்வார். ருக், கர்பம், கஞ்ஜம், தைவம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. ஆரணம், காரணம், ஆதி - வடசொற்கள். கஞ்சம் - நீரில் தோன்றுவது: கம் - நீர். காரணவும்பொழில் - சோலையின்உயர்வைவிளக்குந் தொடர்புயர்வு நவிற்சியணி. "வடவேங்கடம்" என்றது, இயற்கைவிளக்கவந்த அடைமொழி புணர்ந்தது; அடைமொழி இடம்விலக்கவந்ததன்று. வேங்கடம் தமிழ்நாட் டிற்கு வடவெல்லையென்பதுதோன்ற "வடவேங்கடம்" என்றதாகவுங்கொள்ளலாம். மாயவன் - மாயையை யுடையவன்; மாயையாவது - செய்தற்கு அரியனசெய்யுந் திறம்: பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்ச ரியகரமான குணங்களுஞ் செயல்களு மென்னலுமாம். (4) | 5. | மாயவன்கண்ணன்மணிவண்ணன்கேசவன்மண்ணும்விண்ணுந் | | | தாயவன் கண்ணன்கமலமொப்பான்சரத்தாலிலங்கைத் | | | தீயவன்கண்ணன்சிரமறுத்தான்றிருவேங்கடத்துத் | | | தூயவன்கண்ணன்புடையார்க்குவைகுந்தந்தூரமன்றே. | (இ - ள்.) மாயவன் - மாயையையுடையவனும், கண்ணன் - கிருஷ்ணாவதாரஞ்செய்தவனும், மணி வண்ணன் - நீலமணிபோன்ற நிறமுள்ளவனும், கேசவன் - கேசவனென்னுந் திருநாமமுடையவனும், மண்ணும் விண்ணும் தாயவன் - நிலவுலகத்தையும் மேலுலகத்தையும் அளந்தவனும், கண் நல் கமலம் ஒப்பான் - கண்கள் நல்லசெந்தாமரைமலர்போ லிருக்கப்பெற்றவ னும், இலங்கை தீய வன்கண்ணன் சிரம் சரத்தால் அறுத்தான் - இலங்கா புரியில் வாழ்ந்த கொடிய தறுகண்மை யுடையவனான இராவணனது தலைகளைத் தனதுஅம்பினால் துணித்திட்டவனுமாகிய, திருவேங்கடத்து தூயவன் கண் - திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பரிசுத்தமூர்த்தியான எம்பெருமான்பக்கல், அன்பு உடையார்க்கு - பக்திப்பேரன்பை யுடையவர்க ளான பாகவதர்களுக்கு, வைகுந்தம் - முத்தியுலகமாகிய ஸ்ரீவைகுண்டமெ னப்படுகிற பரமபதம், தூரம் அன்று - சேய்மையிலுள்ளதன்று (மிக்கசமீபத் திலுள்ள தென்றபடி); (எ - று.) - ஈற்று ஏகாரம் - தேற்றம். |