பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி503

நான் இடைவிடாது எம்பெருமானது திருவடிகளைத் தியானஞ்செய் யத்தொடங்கிக் கருமமனைத்துந் தொலையுமாறு அவனது கருணைக்கு இலக்காகிவிட்டே னாதலால் இனி என்னைக் கருமத்தினால்வருவனவான வியாதிகளால் ஒன்றும் நலிவுசெய்யமுடியாது என்ற துணிவுகொண்டு, நோய்களை விளித்து, நீங்கள் விரைந்தோடிப்போங்க ளென்று அச்சுறுத்திப்பேசுகிறார். "நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்புகள்போல் நிரந்தெங்கும், கைக்கொண்டுநிற்கின்ற நோய்காள் காலம்பெறவுய்யப்போமின், மெய்க்கொண்டுவந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார், பைக்ங்கொண்டபாம் பணையோடும் பண்டன்று பட்டினங்காப்பே" என்பது முதலாகக்கூறும் ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது, இச்செய்யுள்; "வ்யாதிகளைப் பார்த்து, "பண்டைதேகமும் ஆத்மாவும் என்றிருக்கவேண்டா: அவன் உகந்தருளினநிலங்களிற்பண்ணும் விருப்பத்தையெல்லாம் என்தேகத்திலும் ஆத்மாவிலும் பண்ணிக்கொடு வந்துபுகுந்தான்; நீங்கள் உஜ்ஜீவிக்கவேண்டியிருந்தீராகில், போகப்பாருங்கோள்" என்கிறார்" என்ற வியாக்கியாநவாக்கியம் இங்குங் கொள்ளத்தக்கது. இந்நூலின் 74 - ஆஞ் செய்யுளும் இப்பொருளுடையதே.

புண்டரம் - நெற்றிக்குறி. நேர் அவிரும் புண்டரம் - திர்யக்புண்டர மாகவன்றி ஊர்த்துவபுண்டரமாக மேல்நோக்கி யிடுந் திருமண்; அதனை யுடையவர், ஸ்ரீவைஷ்ணவர்: "நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியா ரென்றோடும்" என்பது காண்க. இனி, "நேரவிரும்புண்டரற்கு அருள்வான்" என்று பாடங்கொண்டு, அதற்கு - (குறுக்காக வடிவம்அமையப்பெற்றிருத்த லால் திர்யக்என்று கூறப்படுகிற விலங்கின்சாதிக்கு உரிய குணஞ்செயல்க ளைக் கொள்ளாது ராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும்) நேர்மையான குணஞ்செயல்களோடு ஒழுகிய கழுகாகிய சடாயுவுக்கு அருள்செய்தவ னென்று உரைத்தலும் ஒன்று; புண்டரமென்பது கழுகென்னும் பொருளில் வருதலை "வரும்புண்டரம் வாளியின் மார்புருவிப், பெரும்புண்திறவாவகை பேருதிநீ, இரும்புண்டநிர்மீள்கினு மென்னுழையிற், கரும்புண்டசொல்மீள்கிலள் காணுதியால்" எனக் கம்பராமாயணத்திலுங் காண்க: "இருந்தபுண் டரமே கங்கம் எருவையே பவணையோடு, கருஞ்சிறை யுவண மைந்துங் கழுகென்ப சகுந்தமும் போ" என்ற நிகண்டும் நோக்கத்தக்கது.

விலங்கினமாகிய கழுகுசாதியில் தோன்றிய சடாயுவை "புண்டரன்" என உயர்திணையாகக்கூறுதல் ஒக்குகமோவெனின், - உயர்திணை அஃறிணை யென்ற பகுப்பிற்குக் காரணம் முறையே அறிவின் நிறைவும் குறைவுமே யாதலால், அவ்வறிவிற்குறைவின்றி ஐம்பொறியறிவோடு பகுத்தறிவையுங் கொண்டு மனிதர்போலவே தொழில்திறமமைந்த அருணபுத்திரனான தெய்வக்கழுகை உயர்திணையின் பாற்படுத்துதல் ஒக்குமென்க; வாநரசாதி யாகிய அநுமான் வாலி சுக்கிரீவன் முதலியோரையும், கரடியாகிய ஜாம்பவானையும், பறவையரசான கருடனையுங் உயர்திணையாகவழங்குதல் காண்க. "புண்டரர்க்கு" என்ற பாடத்துக்கும் உயர்வுப்பன்மையாக இப்பொருள்