கொள்ளலாம்; ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சடாயு "பெரியவுடையார்" என்று மேம்படுத்தி வழங்கப்படுவர். புண்டரீகமென்பது வெண்டாமரையின் பெய ரென வடமொழி நிக ண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும் அது இங்குத் திருமாலின் திருவடிகட்கு உவமையாகவந்ததனால், செந்தாமரையை யுணர்த்திற்று. திருவடிக்குத்தாம ரைமல ருவமை - செம்மை மென்மை யழகுகட்கு என்க. பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர் அவ்விரும்பிற்சென்று லயப்பட்டு மீண்டும் வெளிப்படாது; இது மீளாமைக்கு உவமைகூறப்படுதலை, மேற்காட்டிய "வரும்புண்டரம்" என்ற கம்பராமாயணச்செய்யுளின் பின்னிரண்டடிகளி லுங் காண்க; காய்ந்தஇரும்பு அக்காய்ச்சல்தீர நீரை முற்றும் உட்கொள்ளுதல்போல, எம்பெருமான்திருவடிகள் என்உயிரைத் தம்மிடத்துலயப்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு என்மனத்திற் சேர்ந்திட்டன வென்ற இது, "போரவிட்டிட் டென்னை நீ புறம்போக்கலுற்றாற் பின்னை யான், ஆரைக் கொண் டெத்தை யந்தோ எனதென்பதென் யானென்பதென், தீரவிரும் புண்டநீரதுபோல வென்னாருயிரை, யாரப்பருக வெனக்காராவமுதானாயே" என்ற திருவாய்மொழிப்பாசுரத்தை அடியொற்றியது. தூரஇரும் என்பது, "தூற்றாதே தூரவிடல்" என்றாற்போல நின்றது. இரும் - "உம்" விகுதி பெற்ற ஏவற்பன்மைமுற்று. "புண்தரிக்கும்" என்ற அடைமொழி, காயத்தின்அசுத்தியை விளக்கும். காயம், புண்டரம், பாதம் - வடசொற்கள். அருள்வான் என்பதில், வகரவிடைநிலை - காலமுணர்த்தாது தன்மையுணர்த்திற்று. நெடுமை - உயர்ச்சி. (6) | 7. | சேர்ந்துகவிக்கும்முடிகவித்தாய் சிறியேனிதயஞ் | | | சார்ந்துகவிக்கும்வரமளித்தாய் கொண்டறண்டலைமே | | | லூர்ந்துகவிக்கும்வடமலையாய் பஞ்சொழுக்கியபால் | | | வார்ந்துகவிக்கும்பொழுதிலஞ் சேலென் றுவந்தருளே. | (இ - ள்.) சேர்ந்து - (கிட்கிந்தைநகரத்தைச்) சார்ந்து (அல்லது அடுத்து நண்புபூண்டு), கவிக்கும் - குரங்கினமான சுக்கிரீவனுக்கும், முடி கவித்தாய் - மகுடாபிஷேகஞ் செய்தவனே! சிறியேன் இதயம் சார்ந்து - (அறி வொழுக்கங்களிற்) சிறியவனான எனது மனத்திற் சேர்ந்துநின்று, உகவிக்கும் வரம் அளித்தாய் - மகிழ்விக்கின்ற வரங்களை (எனக்கு)க் கொடுத்தருள் பவனே! கொண்டல் தண்டலைமேல் ஊர்ந்து கவிக்கும் - மேகங்கள் சோ லைகளின்மேல் தவழ்ந்து கவிந்துகொள்ளப்பெற்ற, வட மலையாய் - வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே! - பஞ்சு ஒழுக்கிய பால் வார்ந்து உக - பஞ்சைப் பாலில்நனைத்து அதுகொண்டுபிழிந்து ஒழுக விட்ட பாலும் (கண்டம்அடைத்ததனால் உள்ளேயிறங்கிச்செல்லமாட்டாது கடைவாயினின்று) வழிந்துபெருக, விக்கும் பொழுதில் - விக்கலெடுக்கின்ற அந்திமதசை (எனக்கு) நேரும்பொழுதில், அஞ்சேல் என்று வந்து அருள் - "அஞ்சாதே" என்று (அபயவார்த்தை) சொல்லிக்கொண்டு (என்முன்) எழுந்தருளி (எனக்கு) நற்கதியருள்வாய்; (எ - று.) |