பக்கம் எண் :

506திருவேங்கடத்தந்தாதி

என்னை என்பதற்கு - என்ன தகுதியின்மை யென்று பொருள்கொண்டு, பொரும் என்பதற்கு "என்னை" என்ற செயப்படுபொருள் வருவித்தலு மொன்று. யான் உனக்கு அடிமைப்பட்டபின்பும் என்அறிவைக்கெடுத்து என்னை ஐம்பொறியாசை நலியலாமோ? நலியாதபடி அருள்செய்யவேண்டும் என்பது குறிப்பு; "உண்டுகேட்டுற்றுமோந்துப்பார்க்கு மைவர்க்கே, தொண்டு படலாமோ வுன்தொண்டனேன்" என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும். மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளை "ஐவர்" என உயர்திணையாக்கூறியது, இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி; தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் "தாம்வந்தார் தொண்டனார்" என்பது, உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று" என்றது, இங்கு உணரத்தக்கது. ஐவர்வேட்கை - ஐம்பொறிகளின்வழியாகச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புலன்களையும் வேண்டியபடியெல்லாம் அனுபவிக்கவிரும்பும் ஆசை.

கவந்தன் - தநுவென்னும் யக்ஷனது மகன்; இவன் - ஸ்தூலசிரஸ்என் னும்முனிவனது சாபத்தால் அரக்கனாகிப் பிரமனருளால் தீர்க்காயுள்பெற் றுத் தேவேந்திரனோடுஎதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத் தனதுதலை வயிற்றிலழுந்தியமைபற்றிக் கவந்தம்போலுந் தோற்றமுடைய னானதனால், இப்பெயர் பெற்றான். கபந்தமென்ற வடசொல்லுக்கு - தலையற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள்.

வந்தநா, ஸ்கந்தன், நாதன், ஜீவன் - வடசொற்கள். புந்தி - புத்தியென்ற வடசொல்லின் மெலித்தல்விகாரம். கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல். உந்தி - நாபி; வயிற்றுக்கு இலக்கணை. உனக்கு உரித்தாயபின்னும், உம் - உயர்வுசிறப்பு. அவம் - தீங்கு; அதன்மேல், தன் - சாரியை, ஐ - இரண்ட னுருபு.

(8)

(தலைவனைப்பிரிந்துவருந்தி மாலைப்பொழுதுக்கும் அன்றிற்குரலுக்கும்ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்கல்.)

9.பொருதரங்கத்தும்வடத்துமனந்தபுரத்துமன்பர்
கருதரங்கத்துந்துயில்வேங்கடவ கண்பார்த்தருள்வாய்
நிருதரங்கத்துநிறம்போல்வருமந்திநேரத்தன்றி
லொருதரங்கத்தும்பொழுதும்பொறாளென்னொருவல்லியே.

(இ - ள்.) பொரு தரங்கத்தும் - மோதுகின்ற அலைகளையுடைய திருப் பாற்கடலிலும், வடத்தும் - ஆலிலையிலும், அனந்தபுரத்தும் - திருவனந்தபுர மென்னுந் திவ்வியதேசத்திலும், அன்பர் கருது அரங்கத்தும் - அடியார்கள் தியானிக்கின்ற திருவரங்கமென்னுந் திருப்பதியிலும், துயில் - பள்ளி கொண்டு யோகநித்திரை செய்தருள்கின்ற, வேங்கடவ - திருவேங்கடமுடையானே! - நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் - இராக்கதர்களுடையஉடம் பின்நிறம்போல (இருண்டு கறுத்துப் பயங்கரமாய்) வருகிற, அந்தி நேரத்து - அந்தி மாலைப்பொழுதில், அன்றில் ஒரு தரம் கத்தும் பொழுதும் - அன்றிற்