தைக் காட்டி நாட்டுதல் என்பர். இங்ஙனம் வெளிப்படைப்பொருளால் அந்யாபதேசமாகக்கூறுகிற சிற்றின்பத்துறைச்செய்யுள்கட்கெல்லாம் ஸ்வாப தேசமாகப் பேரின்பத்தின்பாற்படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க. அன்றியும், இங்குக்கூறியது, உலகவாழ்கைச் சிற்றின்பமன்று: "நான்கினுங் கண்ணனுக்கே ஆமது காமம்" என்றபடி எம்பெருமானைச் சேரவேண்டுமென்று அவன்பக்கலிலேயுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது. "கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு, உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று" என்றபடி லோகநாயகனுடைய சேர்க்கையை அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதல் வேதாந்தநிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய இடத்தில் அன்புசெலுத்திய தாதலால், சிற்றின்பக்காதல்போலன்றி, சகலபாபநிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம். கண்ணபிரான்பக்கற்கொண்ட காமத்தால் கோபஸ்திரீகள் முத்திபெற்றன ரென்று புராணங்கூறுதலுங் காண்க. ஓர்உத்தமபுருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய், ஓர் உத்தமகன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே, ஒவ்வொரு வியாஜத்தால், தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே, ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப்புருஷன் அங்குவந்துசேர, இருவரும் ஊழ்வினைவசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு காந்தருவவிவாகக்கிரமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு மற்றுஞ்சில களவுப்புணர்ச்சிக்குஉரிய வகைகளால் அத்தலைமகனது கூட்டுறவைப் பெற்று, பிறகு பிரிந்து, அப்பிரிந்தநிலையிலே பிரிவுத்துயரையாற்றாமல் விரகதாபத்தால் வருந்துகிற தலைமகளது தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ந்து பாவனையால் தலைமகனை எதிரிற்கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலேயுரைத்தது, இது. அன்றி, தோழி தலைமகனை எதிர்ப்பட்டுத் தலைமகளது ஆற்றாமையை அவனுக்குக்கூறியுணர்த்துவ தெனினுமாம். இதனை, மாலைப்பொழுதுகண்டு இரங்கிய செவிலித்தாயின் வார்த்தையாக உரைத்தலும் ஒன்று. அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர். எப்பொழுதும் இணையாகவுள்ள அந்த அன்றிற்பறவையும், அது இருட்பொழுதிற் பார்வைகுறைந்து துணையையிழந்து நலிந்து எழுந்து பறந்து வருந்துதலும், ஆணும்பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில்நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப்பொறாமல் மெலிந்து பெருந் |