பாதுகாக்கப்படுவது; அவநம் - ரக்ஷணம். செல்வி - எல்லாச்செல்வங்கட்கும் உரியவள், திருமகள். ஆதபன் - நன்றாகத் தபிப்பவன். மா தவன் - ஸ்ரீய: பதி; மா - இலக்குமிக்கு, தவன் - கணவன்; இத்திருநாமம் - (சந்திரவம்சத்தில்) மதுவென்றஅரசனது மரபில் (கண்ணனாகத்) திருவவதரித்தவ னென்றும் பொருள்படும்; அப்பொழுது, தத்திதாந்தநாமம்; மது - யதுவின் மூத்த குமாரன். அம்புதி - நீர்தங்குமிடம்; அம்பு - நீர். கண்ண னென்ற திருநாமத்துக்கு - கண்ணழகுடையவ னென்றும், கண்ணோட்டமுடையவ னென்றும் பொருள்கொள்ளலாம். பணி - வினைப்பகுதிதானே ஏவலொருமையாய் நின்றது. இச்செய்யுளின் பின்னிரண்டடிகளில் முதலைந்தெழுத்துக்கள் ஒத்துவந்தது, யமகவகையின்பாற்படும். முன்னிரண்டடி - திரிபு. எம்பெருமான் ஐயங்கார்க்கு ஒருகால் காட்சிதந்து மறைய, அப்பெருமானது இடைவிடாச்சேர்க்கையை விரும்பிய ஐயங்கார் அங்ஙனம் அவனது நிரந்தரஸம்ச்லேஷத்தைப் பெற்றுநின்ற ஆழ்ந்தகருத்துடைய மகான்களை நோக்கி "நீங்கள் நிரந்தராநுபவம்பெற்றவகையை எனக்குக் கூறுவீராக" என்று வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்; விவரம் உய்த்து உணர்க. (10) | 11. | அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவரை | | | அம்பரந்தாமரையஞ்சனவெற்பரையாடகமாம் | | | அம்பரந்தாமரைசூழ்ந்தாரைவாழ்த்திலரைம்புலனாம் | | | அம்பரந்தாமரைபோற்றிரிவாரையகனெஞ்சமே. | (இ - ள்.) அம்பரம் - கடலினிடத்து, தாமரை பூத்து அலர்ந்து அன்ன - செந்தாமரைமலர்கள் தோன்றி மலர்ந்தாற் போன்ற, அவயவரை - திருமே னியுறுப்புக்களை யுடையவரும், அம் பரந்தாமரை - அழகிய பரமபதத்துக்கு உரியவரும், ஆடகம் ஆம் அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை - பொன்மயமான ஆடையை (பீதாம்பரத்தை)த் தாம் இடையில் உடுத்துள்ளவருமாகிய, அஞ்சனவெற்பரை - திருவேங்கடமுடையானை, வாழ்த்திலர் - துதியாதவர்களாய், ஐம்புலன் ஆம் அம்பரம் - ஐம்புலன்களாகிய வெட்டவெளியிலே, தா மரை போல் திரிவாரை - தாவுகின்ற மான்கள் போலத் துள்ளியோடித் திரிபவர்க பேரின்பத்துக்குஉரிய பகவத்விஷயத்திற் செல்லாமல் சிற்றின்பத்துக்கு உரிய விஷயாந்தரங்களிலே வரம்பின்றி ஓடிஉழன்று அலைகின்ற பேதையரோடு கூட்டுறவுகொள்ளலாகாதென்று தம்மனத்துக்கு அறிவுறுத்துகிறவகையாற் பிறர்க்கு உணர்த்துகின்றா ரென்க. கடல் - கரிய திருமேனிக்கும், அதில்தோன்றிமலர்ந்த செந்தாமரைமலர்கள் - கண் கை கால் முகம் வாய் உந்தி என்ற அவயவங்கட்கும் உவமையாகுதலால், "அம்பரந் தாமரை பூத்தலர்ந்தன்ன அவயவர்" என்றார். அம்பரம் - மேகம் எனினுமாம்; "கருமுகில் தாமரைக்காடு பூத்து" என்றார் கம்பரும். பரந்தாமர் என்ற |