ரூபத்தைத் தரித்து அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தா னென்றும் கூறப்படுகின்ற வரலாறுகள்பற்றி, 'வரகமடங் கயலானாய்' என்றார். வர என்று தனியே எடுத்து, சிறந்தவனே யென்று கொள்ளினுமாம்; வரன் என்பதன் விளி. (88) | 89. | மாதிரங்காதன்மனைவாழ்க்கையென்றெண்ணிவான்பொருட்கு | | மாதிரங்காதம்பலவளைவீ ரின்னுமைந்தனென்றோர் | | மாதிரங்காதபடிவணங்கீ ரரிமாவொடுகைம் | | மாதிரங்காதமர்செய்கின்றசேடமலையனையே. | (இ - ள்.) காதல் மனை வாழ்க்கை - விருப்பத்துக்குஇடமான மனையாளோடுகூடி இல்லத்துவாழ்தலை, மா திரம் என்று எண்ணி - மிக்கநிலையுள்ளதென்று நினைத்து, (அந்தஇல்லறவாழ்வுக்கு உபயோகமாக,) வான் பொருட்கு - மிக்க செல்வத்தை ஈட்டுதற்பொருட்டு, மாதிரம் - திக்குக்கள்தோறும், பல காதம் வளைவீர் - அநேககாததூரம் சுற்றியலைபவர்களே! - இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காதபடி - இன்னமும் (உங்களைப்) புத்திரனென்று ஒருபெண் அன்புசெய்யாதபடி (இனியாயினும் பிறப்பற்று முத்திபெறுமாறு), அரிமாவொடு கைம்மா திரங்காது அமர் செய்கின்ற சேடமலையனை வணங்கீர் - சிங்கங்களோடு யானைகள் பின்வாங்காமற் போர் செய்யப்பெற்ற சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானை வணங்குங்கள்; (எ - று.) மீண்டும் பிறப்பில்லாதபடி யென்ற பொருளை 'இன்னும்மைந்தனென்று ஓர்மாது இரங்காதபடி' என்று வேறுவகையாற் கூறினது, பிறிதினவிற்சியணி. 'அரிமாவொடு கைம்மா திரங்காது அமர்செய்கின்ற' என்றது, மலைவளங் கூறியவாறாம். கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனும் நரசிங்காவதாரஞ்செய்தவனுமான திருவேங்கட முடையானைச் சார்ந்து அவனதருள் பெற்ற யானைக ளாதலால், சிங்கத்துக்கு அஞ்சுகின் றனவில்லை யென்க. மஹாஸ்திரம், சேஷன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வான் - உரிச்சொல். வணங்கீர் - ஏவற்பன்மை. (89) | 90. | மலையினரக்கருடன்றெழுந்தாரென்றுமாமறைநூற் | | கலையினரக்கருடனிந்திராதியர்காட்டச்செய்யுங் | | கொலையின ரக்கருடனேறும்வேங்கடக்குன்ற ரென்றா | | லுலையினரக்கருடந்திலரேனுமென்னுள்ளவர்க்கே. | (இ - ள்.) மா மறை நூல் கலையினர் அக்கர் உடன் - சிறந்தவேதசாஸ்திரங்களாகிய கல்வியில் தேர்ந்த பிரமதேவரும் எலும்புமாலையைத்தரித்தவரான சிவபிரானு மாகிய இருமூர்த்திகளுடன், இந்திர ஆதியர் - இந்திரன் முதலிய தேவர்கள், மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட - "மலைகள்போல இராக்கதர்கள் உக்கிரங்கொண்டு ஓங்கினார்கள்" என்றுசொல்லி முறையிட, செய்யும் கொலையினர் - செய்த (அவ்விராக்கத) வதத்தையுடையவரான, அ கருடன் ஏறும் வேங்கடம் குன்றர் - அந்தக் |