பக்கம் எண் :

598திருவேங்கடத்தந்தாதி

கருடனாகிய வாகனத்தின்மேல் ஏறியருள்கிற திருவேங்கடமலையை யுடையவர், என்றால் - என்றுசொன்னால், அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கு உலையின் அரக்கு - (அவர் என்பக்கல்) கருணைபுரியாராயினும் அவர் விஷயத்தில் என்மனம் உலைக்களத்திலிட்ட அரக்காம் (நெகிழ்ந்துஉருகும்).

பகவத்விஷயத்தில் தமக்குஉள்ள பக்திமிகுதியா லாகும் நெஞ்சுருக்கத்தை இதில் வெளியிட்டார். எம்பெருமான் அருள்புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவன்திறத்தில் அன்புசெலுத்துதல் முமுக்ஷுக்களுக்கு (முத்தி பெறவிரும்புவார்க்கு)க் கடமையாதல் காண்க. இச்செய்யுளை, விரகவேதனையுற்ற தலைவியின் கூற்றாகவுங் கொள்ளலாம். அரக்கரெழுந்தாரென்று பிரமருத்திரருடன் இந்திராதியர் காட்ட - "விதியொடு முனிவரும் விண்ணுளோர்களும், மதிவளர்சடைமுடிமழுவலாளனும், அதிசயமுட னுவந்தய லிருந்துழிக், தொள்வேலரக்கர்தங் கொடுமை கூறினார்" என்ற கம்பராமாயணங் களுக்கு - தன்மையிற் இராவணன் முதலியோர். பிரமன் திருமாலினிடம் வேதசா என்ற வடசொற்கள் பிறர்க்கு வெளியிட்டதனால், அவனை, 'மாமறைநூற்கலையினர்' என்றார். அக்கர் - ருத்திராக்ஷமாலையையுடையவ ரெனினுமாம். கலையினர், அக்கர் - உயர்வுப்பன்மை. இனி, மா மறை நூல் கலையினர் அக்கருடன் என்பதற்கு - சிறந்த வேதசாஸ்திரங்களில் வல்லவர்களான முனிவர்களும், யக்ஷர்களுமாகிய இவர்களோடு என்று உரைத்தலுமொன்று; அவ்வுரைக்கு, யக்ஷ ரென்ற வடசொல் அக்கரெனச் சிதைந்த தென்க; யசோதை = அசோதைஎன்பதுபோல. யக்ஷர் - பதினெட்டுத்தேவ கணங்களுள் ஒருசாரார். யக்ஷராஜனான குபேரனுக்கு இராவணன் பகைவனானதனால், அரக்கரெழுச்சியை முறையிடுதற்கு இயக்கரும் உரியவராவர்.

"அக் கருடன்" எனச் சுட்டினது, பிரசித்தி பற்றி: அழகிய கருட னெனினுமாம். கருடன் - பக்ஷிராஜன்; இவனுக்கு, வைஷ்ணவசம்பிரதாயத்தில் 'பெரிய திருவடி' என்று பெயர் வழங்கும்.

(90)

(தோழி, தலைமகனை ஏதங்கூறி இரவுவரல் விலக்கல்.)

91.உள்ளமஞ்சாய் வலியாய் வலியார்க்குமுபாயம்வல்லாய்
கள்ளமஞ்சாயுதங்கைவருமாயினுங் கங்குலினில்
வெள்ளமஞ்சார்பொழில்வேங்கடக்குன்றினில்வீழருவிப்
பள்ளமஞ்சாரல்வழிவரில்வாடுமிப்பாவையுமே.

(இ - ள்.) (நீ), உள்ளம் அஞ்சாய் - (எதற்கும்) மனம் அஞ்சுகின்றாயில்லை; வலியாய் - வலிமையையுடையாய்; வலியார்க்கும் உபாயம் வல்லாய் - வல்லமையுடையவர்க்கும் உபாயங்கற்பிக்கும்படி உபாயம்வல்லை; கள்ளம் - களவும், அஞ்சு ஆயுதம் - பஞ்சாயுதங்களும், கைவரும் - (உனக்குப்) பழக்கமாயுள்ளன; ஆயினும் -, கங்குலினில் - இரவிலே, வெள்ளம் மஞ்சு ஆர் பொழில் வேங்கடம் குன்றினில் - வெள்ளமாகப் பொழிகின்ற மேகங்கள் தங்குகிற சோலைகளையுடைய திருவேங்கடமலையில், வீழ் அருவி பள்ளம் - விழுகிற அருவிப்பெருக்கையுடைய பள்ளங்களோடு கூடிய, அம்