பக்கம் எண் :

அழகரந்தாதி617

தல் வழிபடுகடவுள்வணக்கமேயாம். அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட்கருத்துக்களமைய அம்முதனூலுக்கு வழிநூல்போலச் செய்யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள்வணக்க மென்று அரிதிற் கொள்ளவும் அமையும்.

அங்கத்தமிழ்மறையாயிரம்பாடியளித்துலகோர்
தங்கட்குவீடருளும்புருடோத்தமன் றண்வகுளத்
தொங்கற்பராங்குசன் றாளிணை மாலிருஞ்சோலைமலைச்
சங்கத்தழகரந்தாதிநடாத்தத்தலைக்கொள்வனே.

(இ - ள்.) அங்கம் - (ஆறு) அங்கங்களையுடைய, தமிழ் மறை -தமிழ்வேதமாகிய, ஆயிரம் - ஆயிரம்பாசுரங்களை, பாடி -, அளித்து - (மதுரகவிகள் நாதமுனிகள் முதலிய நல்லோர்களுக்கு உபதேசமுகமாகக்) கொடுத்து, உலகோர்தங்கட்கு வீடு அருளும் - உலகத்தார்க்கு முத்தியைத் தந்தருள்கிற, புருடோத்தமன் - புருஷசிரேஷ்டரும், தண் வகுளம் தொங்கல் - குளிர்ச்சியான மகிழம்பூமாலையைத் தரித்த, பராங்குசன் - பராங்குசனென்னுந்திரு நாமமுடையவருமான நம்மாழ்வாருடைய, தாள்இணை - உபயபாதத்தை, - மாலிருஞ்சோலைமலை சங்கத்து அழகர் அந்தாதி நடாத்த தலைக்கொள்வன் - திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருப்பவரும் தமிழ்ச்சங்கத்துக்குத் தலைவருமாகிய அழகரது விஷயமாக யான்பாடும் அந்தாதிப்பிரபந்தத்தை இடையூறின்றி நடத்துதற்பொருட்டுத் தலைமேற்கொண்டு வணங்குவேன்; (எ - று.) - ஏகாரம் - ஈற்றசை.

"மாறன்பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன், ஆறங்கங் கூற வவதரித்த" என்றபடி ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்ற நான்குவேதங்களுக்கும் சிக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறுசாஸ்திரங்களும் அங்கமாதல்போல, சதுர்வேதசாரமாக நம்மாழ்வார்அருளிச்செய்த திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதருவந்தாதி என்றநான்குதிவ்வியப்பிரபந்தங்களுக்கும் திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரியதிருமொழி திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் திருவெழுகூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல் என்ற ஆறுபிரபந்தங்களும் அங்கமாகுதலால், 'அங்த்தமிழ்மறை' எனப்பட்டது; "குருகூர ரங்கமறைத்தமிழ்மாலை" என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும். (நம்மாழ்வார்பிரபந்தங்கள் வேதமாதலையும், திருமங்கையாழ்வார் பிரபந்தங்கள் அவற்றிற்கு அங்கமாதலையும் ஆசார்யஹ்ருதயம் முதலிய நூல்களிலும், அவற்றின் வியாக்கியாநங்களிலும் பரக்கக்காணலாம்.) வேதங்களின் அர்த்த நிர்ணயத்துக்குச் சாஸ்திரங்கள் உபகாரகங்க ளாகையால், அங்க மெனப் படும்; அத்தன்மையை இங்குங் கொள்க. "தமிழ்மறை யாயிரம்" என்றது, திருவாய்மொழியை. நான்குவேதங்களுள்ளும் ஸாமவேதம் சிறந்ததாதல் போல, சதுர்வேதசாரமான நம்மாழ்வார் பிரபந்தங்கள் நான்கனுள்ளும் ஸாமவேதஸாரமான திருவாய்மொழி பிரதாநமாதலால், அது இங்கு எடுத்