பக்கம் எண் :

618அழகரந்தாதி

துக்கூறப்பட்டது. தலைமைபற்றி இதனை எடுத்துக்கூறியது, பிறவற்றிற்கும் உபலக்ஷணம். திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுள்களாயினும், சொச்சத்தொகையைக்குறியாது பெருந்தொகையை மாத்திரமே குறித்து, "ஆயிரம்" என்றார்; எம்பெருமானுடைய ஆயிரத்தெட்டுத் திருநாமங்களை "ஸஹஸ்ரநாமம்" என்றல்போல. நூறுபதிகத்திலுமுள்ள நூறுதிருநாமப்பாட் டுக்களையும் ஒதுக்குமிடத்து ஆயிரத்திரண்டேயாகுமன்றோ. ("ஆராதகாதற் குரு கூர்ச்சடகோபன், ஓராயிரஞ்சொன்னவவற்றுளிவைபத்தும், சோரார் விடார்கண்டீர் வைகுந்தந்திண்ணெனவே", "குரு கூர்ச்சடகோபன், கூறின வந்தாதியோராயிரத்துளிப்பத்துங், கூறுதல்வல்லாருளரேற் கூடுவர் வைகுந்தமே", "பண்டலையிற்சொன்ன தமிழாயிரத்திப்பத்தும்வல்லார், விண்டலையில் வீற்றிருந்தாள்வரெம்மாவீடே", "குருகூர்ச்சடகோபன்சொல், கெடலி லாயிரத்துள்ளிவைபத்தும், கெடலில்வீடுசெய்யுங் கிளர்வார்க்கே" என்றபடி) திருவாய்மொழியோதினவர்கள் முத்திபெறுதலால், 'ஆயிரம்பாடியளித்துலகோர்தங்கட்கு வீடருளும் புருடோத்தமன்' என்றார். ("மாறன்மலரடியே, வீசுபுகழெம்மாவீடு", "அருள்கொண்டாடு மடியவரின்புற, அருளினா னவ்வருமறையின்பொருள், அருள்கொண்டாயிரமின் தமிழ்பாடினான், அருள் கண்டீரிவ்வுலகினின்மிக்கதே" என்பவையும் இங்கு உணரத்தக்கன.)

புருஷோத்தமன் என்ற வடமொழிப்பெயர், புருஷ உத்தமன் என்று பிரியும்; குணசந்தி: 'அ ஆ முன் உ ஊ வரின் இரண்டுங்கெட ஓர் ஓகாரம் தோன்றும்." புருடோத்தமன் - புருடரிற்சிறந்தவன்; உத்தமபுருஷன். பிரபந்நஜநகூடஸ்தராதலால், ஆழ்வார், புருடோத்தம னெனப்பட்டனர். ஆழ்வார் நாராயணாம்ச மாதலால், அவரை, அத்திருமாலின் திருநாமமாகிய 'புருடோத்தமன்' என்ற பெயராற் குறித்தன ரென்றுங் கொள்ளலாம்; "வேதந் தமிழ்செய்த மெய்ப்பொருளே" என்றார் பிறரும். தம்பக்கல் திருவுள்ள முவந்து திருக்குருகூர்ப் பொலிந்துநின்றபிரான் பிரசாதித்த மகிழமலர்மாலையைத் தரித்ததனால், ஆழ்வார்க்கு 'வகுளாபரணர்' என்று ஒரு திருநாமம் வழங்கும். மிகக்களித்துக் கொழுத்துக் செருக்கித் திரிந்து எதிர்த்து வாதப்போர்க்குவரும் பிறமதத்தவராகிய மதயானைகளைத் தமது பிரபந்தங்களிற்கூறிய தத்துவார்த்தங்களைக்கொண்டு செருக்கடக்கிக் கீழ்ப் படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவி போலுதலால், நம்மாழ்வார்க்குப் பராங்குச னென்று ஒருதிருநாம மாயிற்றென்க; பர அங்குச என்று பிரிக்க: தீர்க்க சந்திபெற்ற வடமொழித்தொடர். 'அஆமுன் அஆவரின் இரண்டுங்கெட ஓர் ஆகாரம் தோன்றும்.' பரர் - அயலார், அங்குசம் - மாவெட்டி, தோட்டி. சங்கம் - புலவர் கூட்டம். தமிழ்ச்சங்கத்துக்குத் திருமாலிருஞ் சோலைமலையழகர் தலைவராதலை, "தண்டமிழ்ச்சங்கத்தனியிறையவனே," "சுத்தத்தமிழ்ப் புலவர், சங்கத்திருப்பிரியான்" என்ற அழகர்கலம்பகத்தாலும் அறிக.

அங்கம், வகுளம், ஸங்கம் - வடசொற்கள். வகுளமென்ற மகிழமரத் தின்பெயர், இங்கு அதன் மலர்க்குச் சினையாகுபெயராம். தொங்கல் - தொங்குவதென்னும்பொருளதாய், மாலைக்குக் காரணக்குறியாம்; இதில், அல் -