பக்கம் எண் :

620அழகரந்தாதி

"சதிரிளமடவார்தாழ்ச்சியைமதியாது, அதிர்குரற்சங்கத்தழகர்தங்கோ யில், மதிதவழ்குடுமிமாலிருஞ்சோலைப், பதியதுவேத்தி யெழுவதுபயனே" என்று நம்மாழ்வார் தம்திருவுள்ளத்தைக்குறித்து உரைத்ததுபோல, இது, இந்நூலாசிரியர் தமதுநெஞ்சைநோக்கி அறிவுணர்த்தியதாம். அழகரைத் துதிப்பதே ஆத்மாவுக்குப் பரமபிரயோஜந மென்றவாறு, நினைத்தல் பேசுதல் தொழில்செய்தல் என்பன முறையே மனம் மொழி மெய் என்னும் திரிகரணத்தின் செயலாதலால், அவற்றில் வாக்கின் செயலான உரைத்தலை மனத்தின்மேலேற்றி "உரை நெஞ்சமே" என்றது, ஓருறுப்பின் வினையை மற்றோருறுப்பின் மேலேற்றிக்கூறும் ஒருவகை உபசார வழக்காம்; வாயினால் துதித்தற்கும் மனத்தின் நினைப்பு இன்றியமையாது வேண்டுதலால், அத்தலைமைபற்றி, இங்ஙனம் புறக்கரணத்தின்செயல் அகக்கரணத்தின் மேலேற்றப்பட்ட தென்க. இது பிரபந்தத்தின் தொடக்கமாதலால், நூல்முழுவதையும் பாடித்தலைக்கட்டுதற்குத் தம்மனத்தைப்பலவழிகளிற் செல்லாமல் ஒருவழிப்படுமாறு உடன்படுத்தவேண்டியவராய் "மாலலங்காரனை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே" என்று இங்ஙனம் அதற்கு உபதேசித்தன ரென்க. 'நீராழிவண்ணனை' முதலிய விசேஷணங்களால், அப்பெருமானுடைய பலவகைமகிமைகளையும் இனிமையையும் அந்தநெஞ்சத்துக்கு எடுத்துக்காட்டியபடியாம்.

"நீராழிவண்ணனை" என்பது முதலியன, ஒருபொருளின்மேல்வந்த பலபெயர்கள். விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிலும் வேற்றுமையுருவை விரித்துரைப்பது, ஒருவகைப்பாஷைநடை; இதனை, அடுத்த செய்யுள்களிலும் காண்க. "மாலலங்காரனை" என்பது, விசேஷ்யம். மற்றவை - விசேஷணம். மாலலங்காரன் என்பது - அழகரதுபரியாயநாமங்களில் ஒன்று.

ஆழி என்ற சொல் - முதலடியில் கடலென்ற பொருளிலும், இரண்டாமடியில் மோதிரமென்ற பொருளிலும், மூன்றாமடியில் சக்கராயுத மென்ற பொருளிலும், நான்காமடியில் தேருருளையென்ற பொருளிலும் வந்தது. "சாகரம் தேர்க்கால் சக்கரம் வட்டம், மோதிர மென்ன மொழிந்தவை யைந்தும், நேமியு மாழியுமென நிகழ்த்தினரே" என்ற பிங்கலந்தை இங்கு நோக்கத்தக்கது. கடலைக்குறிக்கும்போது ஆழ்ந்துள்ளது ஆழி என்றும் (இ - கருத்தாப்பொருள்விகுதி), சக்ராயுதத்தைக்குறிக்கும்போது பகைவரை அழிப்பது ஆழி என்றும் (கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்து கெட்டுப் பகுதிமுதல்நீண்டபெயர்), மற்றவற்றைக்குறிக்கும்போது வட்டவடிவுடையது என்றும் காரணப்பொருள் காண்க. பரம் வியூகம் விபவம் அந்தரியாமி அர்ச்சை என்னும் எம்பெருமானுடைய ஐந்துநிலைகளுள் திருப்பாற்கடலிலெழுந்தருளியிருக்கிற பெருமான் வியூகமூர்த்தியாவன்.

நீரம் வர்ணம் ஸ்ரீ: என்ற வடசொற்கள், நீர் வண்ணம் சீர் என விகாரப்பட்டன வென்பர்; இவற்றைத் தனியே தமிழ்மொழியென்பாரு முளர். நாதன், நிர்மலன், தைவம், அலங்காரன் - வடசொற்கள்; நிர்மலன் என்ற திருநாமம், எம்பெருமான் இயல்பிலே யாதொருகுற்றமும் தன்னிடத்தில்