இனி, இச்செய்யுளில், "மாணிக்கநகம்", "பாணிக்கநகம்பலி", "ஆணிக்கநகமுடி," "பேணிக்கநகனுக்கு" என நான்குஅடிகளிலும் பொதுநகரமான பாடங் கொள்ளுதல் பொருந்துமாறுங் காண்க. | 4. | பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர் | | கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய் | | முத்தரும்பாருந்தொழுமழகா வண்டுமூசுந்துழாய்ப் | | புத்தரும்பார்முடியா யடியாரைப்புரப்பவனே. | (இ - ள்.) முத்தரும் - முத்திபெற்றவர்களும், பாரும் - இவ்வுலகத்தவர்களும், தொழும் - வணங்கப்பெற்ற, அழகா - அழகனே! - வண்டு மூசும் வண்டுகள் மொய்க்கப்பெற்ற, துழாய் - திருத்துழாயின், புது அரும்பு - புதிய (அன்று அரும்பிய) அரும்புகள், ஆர் - பொருந்திய, முடியாய் - திருமுடியையுடையவனே! அடியாரை புரப்பவனே - அடிமைப்பட்டவர்களைப் பாதுகாத்தருள்பவனே! - பித்து அரும்பாநின்றநெஞ்சனை - (விஷயாந்தரங்களிலே) ஆசைப்பித்து உண்டாகின்ற மனத்தையுடையேனும், வஞ்சனை - வஞ்சக முடையேனும், பேர் உலகோர் கைத்து அரும் பாவி எனும் கடை யேனை - பெரிய உலகத்திலுள்ளார் (பலரும்) வெறுத்து 'கொடியபாவி (இவன்)' என்று இகழ்தற்கு உரிய கடைப்பட்டவனுமாகிய என்னை, கடைக்கணியாய் - கடாக்ஷித்தருள்வாய்; (எ - று.) நற்குண நற்செய்கைகள் சிறிதுமின்றித் தீக்குணந் தீச்செயல்களிலே ஊன்றிநின்ற எளியேனுக்கு நீ கடாக்ஷித்தருளினாலன்றி உய்யும்வகையில்லை யென்பதாம். வஞ்சன் - "பண்டே யுன்தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று" என்றபடி ஆத்மாபஹாரஞ்செய்த யான் என்றவாறு; இயல்பிலே எம்பெருமானுக்கு அதீநனான தன்னை அங்ஙனம் அடிமையென்று கருதாது ஸ்வதந்திரனென்று எண்ணி அதற்கு ஏற்ப ஒழுகுகின்றேன் என்க. அரும் பாவி - போக்கவொண்ணாத தீவினைகளை யுடையவன்; "அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன்" என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும். கடையேன் - அதமனான யான்; தன்மையொருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர். கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல்; பெயரின்மேல்வந்த வினை; ஆய் - ஏவலொருமைவிகுதி. 'கடையேனைக் கடைக்கணியாய்' என்றவிடத்துச் சொல்நயம் கருதத்தக்கது. மீளாவுலகமாகிய முத்தியை யடைந்து அங்கு நிரதிசய வாநநதத்தை யனுபவிப்பவர்களும் அதனைவிட்டுத் தன்னையவாவித்தொழும்படியான அழகன் என, அப்பெருமானுடைய திவ்விய சௌந்தரியாதிசயத்தை எடுத்துக் காட்டியவாறாம். (4) | 5. | புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமா | | துரந்தரசாளிலென் னல்குரவாகிலென் றொல்புவிக்கு | | வரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளே | | நிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்பட்டுநின்றபின்னே. | |