பணிபதி - வடமொழித்தொடர்; நாகராஜன், நூற்றுவர்பாற் சென்றது, கண்ணன் பாண்டவதூதனாய் உபப்பிலாவியத்தினின்று அஸ்திநாபுரிக்கு எழுந்தருளியபொழு தென்க. பதினாலு புவனம் - பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம் என்ற மேலேழுலகங்களும், அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாளம் என்ற கீழேழுலகங்களுமாம். பூலோகத்தை யளந்ததில் அதன் கீழுலகங்களேழும், மேலுலகத்தையளந்ததில் புவர்லோகம் முதலிய ஆறும் அடங்குதலால், 'பதினாலுபுவனமுந்தாயின' என்றார்; உம்மை - முற்றுப்பொருளது: ("புடவிகடத்தலையீரேழளந்தன" என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.) உலகங்களெல்லாம் இயல்பிலே தமது திருவடிகட்குக் கீழ்ப்பட்டன வென்பது காட்டி எல்லாவுயிர்களையும் ஆட்கொண்டருளுதற்கு, உலகமளக்கிறதென்கிற வியாஜத்தால் எல்லாவுயிர்களின் முடியிலும் தன்திருவடிகளை வைத்தனன் என்ற கருத்துத் தொனிக்குமாறு, "பணிபதினாலுபுவனமுந் தாயின" என்றார். தாயின - தாவு என்ற பகுதி, தொகுத்தல் விகாரப்பட்டுத் தாஎன நின்றது. 'பதின்மர்பாப்பணி பதி' என்றது, நூற்றெட்டுத் திருப்பதிகளை, உவத்தலாகிய எம்பெருமானது செயலை அவனது திருவடிகளின்மேல் ஏற்றிக்கூறியது, உபசாரவழக்கு; (திருவேங்கடத்தந்தாதியில் "அடவிகடத்தலை வேட்டன" என்றதனோடு இதனை ஒப்பிடுக.) பொன் - ஆகுபெயர். இது, யமகச்செய்யுள். (94) 95. | பாதகரத்தனைபேருங்கனகனும்பன்னகத்தா | | லே தகரத்தனையற்கருளாளியை யெட்டெழுத்து | | ளோநகரத்தனைச் சுந்தரத்தோளுடையானை நவ | | நீதகரத்தனைச் சேர்ந்தார்க்குத்தேவருநேரல்லரே. | (இ - ள்.) பாதகர் அத்தனை பேரும் - தீவினையுடையரான அசுரர்களவ்வளவு பேரும், கனகனும் - இரணியனும், பல் நகத்தாலே தகர - கைந்நகங்கள்பலவற்றாற் பிளந்தழிய, தனையற்கு அருள் - (அவ்விரணியனது) குமாரனான பிரகலாதாழ்வானுக்குக் கருணைசெய்த, ஆளியை - (நர)சிங்க மூர்த்தியும், - எட்டு எழுத்துள் ஓது அகரத்தனை - அஷ்டாக்ஷரமந்திரத்தில் (முதலிலே) சொல்லப்படுகிற அகரமென்னும் உயிரெழுத்தின் பொருளாயுள்ளவனும், சுந்தரம் தோள் உடையானை - அழகிய திருத்தோள்களை யுடையவனும், நவநீத கரத்தனை - (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை யேந்திய கையையுடையவனுமாகிய அழகப்பிரானை, சேர்ந்தார்க்கு - சரணமடைந்தவர்கட்கு, தேவரும் நேர் அல்லர் - (புண்ணியப்பயனையே அனுபவிப்பவரான) தேவர்களும் சமானராகார்; (எ - று.) என்று பாகவதமகிமை கூறியவாறாம். புண்ணியப் பயனுள்ளவளவும் சிற்றின்பம் நுகர்ந்து அஃது ஒழிந்தவளவிலே மீண்டும் இவ்வுலகிற் பிறந்து வருந்தக்கடவரான தேவர்கள், எம்பிரானருளால் இருவினையும் அற்று இனி |