ஆரையும் - யாரையும் என்பதன் மரூஉ; எவ்வளவுநெஞ்சுறுதியுள்ளவர் களையும் என்றபடி. அலங்கா - உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலங்குதல் - அசைதல். "பல்லலங்கா நைந்து கோலூன்றி" என்றவிடத்து, சினைவினை முதல்வினை கொண்டது; அலங்குதல் - பல்லின் வினையாதலும், நைந்து கோலூன்றுதல் - அப்பல்லுடையானது வினையாதலுங் காண்க. பல்லலங்கா நைந்து கோலூன்றியும் - முற்றமூத்தும் என்றபடி; உம் - இழிவு சிறப்பு. மல்லல் - வளப்பமுணர்த்தும் உரிச்சொல். காரிகை - அழகு; அதனையுடையவர், காரிகையார். மருள் - காமமயக்கம். (96) (பிரிவாற்றாத தலைவிநிலையைக்குறித்துப் பாங்கி இரங்கல்.) 97. | சோலையிலாமையில்சேர் திருமாலிருஞ்சோலை நின்றான் | | வேலையிலாமையில்வேடங்கொண்டான் புயமேவப்பெறாச் | | சேலையிலாமையிலங்குகண்ணா ளவன்றெய்வத்துழாய | | மாலையிலாமையின்மாலையுற்றாளந்திமாலையிலே. | (இ - ள்.) சோலை இல் ஆ - சோலைகளை(த் தமக்கு) இருப்பிடமாக (க்கொண்டு), மையில் சேர் - மயில்கள் தங்கிவசிக்கப்பெற்ற, திருமாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலைமலையில், நின்றான் - நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றவனும், - வேலையில் ஆமையில் வேடம் கொண்டான் - (திருப்பாற்) கடலிலே ஆமைபோல வடிவங்கொண்டு அவதரித்தவனுமான அழகப்பிரானுடைய, புயம் - தோள்களை, மேவ பெறா - தழுவப் பெறாத, சேல் ஐயில் ஆம் மை இலங்கு கண்ணாள் - சேல்மீனும் வேலாயுதமும் போன்ற மையிடப்பெற்று விளங்குங் கண்களை யுடையவளான இம்மங்கை, அவன் தெய்வம் துழாய் மாலை இலாமையில் - அத்தலைமகனது தெய்வத்தன்மைபொருந்திய திருத்துழாய்மாலை கிடைக்கப்பெறாமையால், அந்தி மாலையிலே - அந்திமாலைப்பொழுதிலே, மாலை உற்றாள் - மயக்கத்தை யடைந்தாள்; (எ - று.) இல் - இடம். ஆ - ஆக என்பதன் விகாரம். மையில் = மயில்: முதற் போலி. அங்குள்ள சோலைகள், மயில்கள் விரும்பித் தமக்குஉரிய வாசஸ்தாந மாகக்கொண்டு நித்தியவாசஞ் செய்யும்படியான வளமுடையன வென்க. மேவப்பெறாக் கண்ணாள் என இயையும். சேல் - மீனின் சாதிபேதங்களிலொன்று; இது, மகளிர்கண்ணுக்குப் பிறழ்ச்சியிலும் வடிவிலும் உவமம். ஐயல் = அயில்: முதற்போலி. ஆம் - உவமவுருபு. இலாமையில், இல் - ஐந்தனுருபு, ஏது, மால் - மயக்கம். அதனையுறுதல், மோகமென்னும் மன்மதாவத்தை. அந்திமாலை - ஒருபொருட்பன்மொழி; அந்தியென்ற பொதுப்பெயர் மாலை யென்ற சிறப்புப்பெயரோடு கூடி ஒருபொருளையுணர்த்திய தென்னலாம்: இதனை, இருபெயரொட்டென்றலு முண்டு. "காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலைமலரு மிந்நோய்" என்றபடி, கலவிக்குரியகால மான இரவின் தொடக்கத்திலே, தம்தம் துணையைக் கருதி வந்துசேரும் விலங்குகளையும் மக்களையுங் கண்டு தலைவி விரகவேதனைமிகுதலால், "அந்தி |