பக்கம் எண் :

அழகரந்தாதி741

மாலையிலே மாலையுற்றாள்" என்றார். நான்காமடியில், வெவ்வேறு பொருள் பட "மாலை" என்ற சொல் பலமுறை வந்தது, சொற்பின்வருநிலையணி.

ஞானக்கண்ணுக்கு இலக்காகி மறைந்த எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்ற ஐயங்காரது வியாமோகத்தைக் கண்ணுற்ற அன்பர்கள் இரங்கிக் கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள். முதலிரண்டடி - அடியார்கட்கு அருளுதற்கென்று வளப்பமுள்ள திவ்வியதேசத்தில் வந்து நித்தியவாசஞ்செய்பவனும் சமயமறிந்து உதவுபவனு மான எம்பெருமானுடைய திருத்தோளழகி லீடுபட்டு அவனது நிரந்தராநுபவத்தைப் பெறாத என்றவாறு. அயில் ஆம் கண்ணாள் - எப்பொருளிலும் நுட்பமாகநுழைந்து செல்லுங் கூரிய ஞானவைலக்ஷண்யத்தை யுடைய ஐயங்கா ரென்றபடி. சேல்ஆம்கண்ணாள் - எம்பெருமானைப்பிரிந்த கலக்கத்தால் இப்பொழுது இவர்அறிவை ஓரிடத்திலேஒடுக்கி நிறுத்துந் தியானநிலைகுலைந்து பலபொருள்களிற்செலுத்தும் அறிவுடையராயின ரென்க. மைஇலங்குகண்ணாள் - அஞ்சனவண்ணனாகிய பெருமானை இலக்காக்கொள்ளும் உணர்வுடையவ ரென்றவாறு. அவன்தெய்வத்துழாய்மாலையிலாமையில் - அப்பெருமானது திவ்வியமான இனிமை அனுபவிக்கக் கிடையாமையால், மாலை உற்றாள் - வியாமோகத்தையடைந்தனர், அந்திமாலையிலே - பேராநந்தமனுபவிக்கக் கடவதான காலத்திலே யென்க. சோலை இல்ஆ மயில்சேர் திருமாலிருஞ் சோலை - அழகாகவிரிந்துகாட்டுந் தோகைக்கண்கள்பலவற்றை யுடையன வாய்க் கார்வரவுகண்டுகளித்துக்கூத்தாடும் மயில்கள் போல, பொலிவுறப் பலபடியாகவிசாலிக்கிற ஞானக்கண்களையுடையராய்க் காளமேகவண்ணனான எம்பெருமானது தரிசனத்தாற் களித்துக் கூத்தாடும் பாகவதர்கள் தங்கட்கு உரிய வாசஸ்தாநமாகக் கொண்டுநித்தியவாசஞ்செய்யப்பெற்ற திவ்வியதேச மென்னலாம். சேலாங் கண் - எம்பெருமானது மத்ஸ்யாவதாரத்திலே ஈடுபட்டுத் தந்மயமான ஞான மென்றலுமாம்

(97)

(பிரிவாற்றாதுவருந்துந் தலைவிநிலையைத் தலைவனுக்குப் பாங்கி கூறல்.)

98.மாலைக்கரும்புசிறுகாறுகைக்கவருந்துமெங்க
ளாலைக்கரும்புதன்னாசையெல்லாஞ்சொல்லி லாயிரந்தோட்
டோலைக்கரும்புண் டொடமுடமாமதியூர்குடுமிச்
சோலைக்கரும்புயலே யருளா யுன்றுளவினையே.

(இ - ள்.) தொட முடம் ஆ (க) - (அடியில்) உராய்தலாலே அடிதேய்ந் திடுமாறு, மதிஊர் - சந்திரமண்டலம் தவழ்ந்துசெல்லப்பெற்ற, குடுமி - சிகரத்தையுடைய, சோலை - திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற, கரும் புயலே - காளமேகம்போன்றவனே! - மாலைக்கு - மாலைப் பொழுதிலே, அரும்பு சிறு கால் துகைக்க - மந்தமாகவீசுகின்ற இளந்தென்றற்காற்று வருத்துதலால், வருந்தும் - வருந்துகிற, எங்கள் ஆலை கரும்பு தன் - ஆலையிலகப்பட்டகரும்புபோன்றவளான எங்கள் தலைவியினது, ஆசை எல்லாம் ஆசைமுழுவதையும், சொல்லில் - சொல்லிவருவதானால், ஆயி