ரம் தோடு ஓலைக்கு அரும் புண் - (அதனைஎழுதுமிடத்து) ஆயிரம்பனையோலைக்கு (எழுதுதலால்) அரியபுண்ணாகும்; (இங்ஙனமிருத்தலால்), உன் துளவினை அருளாய் - நினது திருத்துழாய்மாலையை (இவட்கு)த் தந்தருள்வாய். ஒருவழித்தணந்த தலைவன் வந்து சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி சென்று அவனைச்சந்தித்து, தலைவியின் வேட்கைநோய்மிகுதியைக் கூறியது, இது. "நீங்கியணைந்தவர்க்குப் பாங்கி பகர்ந்ததுழு; இது, "வருத்த மிகுதிகூறல்" எனப்படும். இதன்பயன், விரைவில் இவளை வரைந்துகொள்க வென வற்புறுத்துதல். தலைவரைப்பிரியாத தலைவியர்க்குத் தம்வரவினால் மகிழ்ச்சியை விளைவிப்பனவான மாலைப்பொழுதும் மந்தமாருதமும், பிரிந்ததலைவியர்க்குக் காமோத்தீபகமாய் விரகவேதனையைவளர்த்து வருத்துதலால், 'மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க வருந்தும்' எனப்பட்டது. இரசமுள்ள கரும்பு போல இனிமைமிக்கவளான இவள், அது ஆலையிலகப்பட்டு நொருங்கிச் சிதையுமாறுபோல இங்ஙனம் இவ்விரண்டுக்கும் இலக்காகி வருந்துகின்றன ளென்பாள், 'துகைக்க வருந்தும் ஆலைக்கரும்பு' என்றாள். ஒருபால் காதல்நோயினாலும் மற்றொருபால் காமோத்தீபகப்பொருள்களினாலும் நெருக்கி வருத்தப்பெறுமவ ளென்றவாறுமாம். 'மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க' என்ற சொற்போக்கு, துணையிழந்து தனிப்பட்டுநின்ற சமயம் பார்த்து இருட்பொழுதிலே இழிவான கால்கொண்டு உதைக்க என் ற ஒருபொருளைத் தொனிப்பிக்கும். இவளது ஆசைநிலைகளை யெல்லாஞ் சொல்வதா னால், 'துகைக்க வருந்தும்' எனப்பட்டது. இராசமுள்ள கரும்பு போல இனிமைிக்கவளான இவள், அது ஆலையிலகப்பட்டு நொருங்கிச் சிதையுமாறுபோல இங்ஙனம் இவ்விரண்டுக்கும் இலக்காகி வருந்துகின்றன னென்பாள், அவற்றை ஒருவர் எழுதிவருமிடத்து ஆயிரம் ஓலைக்கு எழுதக்காணு மென்பது, 'ஆசையெல்லாஞ்சொல்லி லாயிரந்தோட்டோலைக்கரும்புண்' என்றதன் கருத்து; இதனை "பன்னியுரைக்குங்காற் பாரதமாம்" என்றாற்போலக்கொள்க. கூரியஎழுத்தாணிகொண்டு ஓலையிற்பதியும்படியெழுதுதலால், அதற்குப் பொறுத்தற்கு அரிய புண்ணாகு மென்று கற்பித்து, 'ஓலைக்கு அரும்புண்' எனப்பட்டது; எழுதியஓலையை "செல்லரித்தஓலை" என்று திருவரங்கக்கலம்பகத்திற் சொல்லியதனோடு இதனை ஒப்பிடுக. "தொடமுடமாமதியூர்குடுமி" என்றது - அதிசயோக்தி வகையால், அம் மலையின் மிக்க உயர்வை எடுத்துக்காட்டும். வானத்திலே சந்திரன் செல்லும் வீதியளவும் அம்மலைச்சிகரம் உயர்ந்திருத்தலால், சந்திரன் அச்சிகரத்தில் அடியுராய்ந்து சென்றுசென்று அவ்வடிப்புறம் தேய்வதாயிற் றென்க. 'முடமா' என்பதில், ஆ என்பது - ஆக என்பதன் விகாரம். நாமைகதேசே நாமக்ரஹணத்தால், சோலைமலை, "சோலை" எனப்பட்டது. புயல் - உவமவாகுபெயர். மாலைக்கு - உருபுமயக்கம். அன்றி, நினது திருத்துழாய்மாலைக் காக எனினுமாம்; அப்பொருளில், 'வருந்தும்' என்பதனோடு இயையும். தோட்டோலை - ஒருபொருட்பன்மொழி. எம்பெருமானைப்பிரிந்து வருந்தும் ஐயங்காரது நிலைமையை அன்பர்கள் அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறை பொருள். மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க வருந்தும் - உரியகாலத்தி |