லே பேறுகிடையாமையால், உலகத்துப்பொருள்கள்மேலிடுதல்பற்றி வருந்துகின்றனர் இவரென்க. ஆலைக்கரும்பு - இக்கு அரையந்திரத்துட்பட்ட தென்ன இருவினையுட்புக்கு அரைமாநொடியுந்தரியாதுழல் புன்பிறப்பைக் குறித்து வருந்துபவர் இவர் என்க. உன் துளவினை அருளாய் - நினது இனிமையை இவர்க்கு அருள்செய்வாய் என்றவாறு. பிறவும காண்டுகொள்க. இம்மலையின் உயர்வை மதியாது வருபவர் துன்புறுவரென்பது, 'தொடமுடமா மதியூர்குடுமி' என்ற அடைமொழியாற் போதரும். 'ஓலைக்கரும்புண் தொட முடமாம்' என்பதற்கு வேறு உரை கூறுவரே னும், பொருந்துவதை ஆய்ந்துகொள்க; பிறஇடங்களிலும் இவ்வாறே. (98) 99. | துளவிலையார்பொன்னடிமுடிசூட்டித்தொண்டாக்கியென்னை | | வளவிலையாக்கொண்டநீகைவிடேன் மங்கலகுணங்க | | ளளவிலையா வலங்கார சமயிகளாய்ந்தவண்ண | | முளவிலையா யுருவாயருவாயவொருமுதலே. | (இ - ள்.) மங்கலகுணங்கள் அளவு இல் ஐயா - திருக்கலியாண குணங்கள் அளவின்றி மிகப்பெற்ற ஸ்வாமீ! அலங்கார - அழகனே! சமயிகள் ஆய்ந்த வண்ணம் - பற்பலசமயத்தார் (தம்தமதுநூல்களைக்கொண்டும் புத்தி சக்திகளைக்கொண்டும்( ஆராய்ந்தவாறு, உள இலை ஆய் உரு ஆய் அரு ஆய் - (அவர்களால்) உள்ளனவென்று கூறப்படும் பொருள்களும் இல்லையெனப் படும் பொருள்களும் உருவப்பொருளும் அருவப்பொருளும் ஆகின்ற, ஒரு முதலே - ஒப்பற்ற முதற்பொருளே! - துளவு இலை ஆர் பொன் அடி முடி சூட்டி - துளஸீதளங்கள் பொருந்திய (நினது) திருவடிகளை (என்) சிரமேல் வைத்து, என்னை -, தொண்டு ஆக்கி - அடிமையாக்கி, வளம் விலை ஆ கொண்ட - நல்ல விக்கிரயப் பொருளாகக் கொண்ட, நீ -, கைவிடேல் - கை விடாதே; (எ - று.) என்முடியில் அடிவைத்து என்னை அடிமையாகக்கொண்டு விலைக்குவாங்கிய பொருளைப்போல அங்கீகரித்தருளிய, நீ, அங்ஙனம் அடிமையான என்னைக் கைவிடாது காத்தருளக்கடவை யென்பதாம். துளவுஇலை - அடியார்கள் எம்பெருமான் திருவடிகளில் அருச்சித்தவை நின்திருவடி என்முடிக்கு அலங்காரமென்பது பட, "பொன்னடிமுடி சூட்டி" என்றார். இம்முடியில் அடிசூட்டுதல், இதற்குக் கிரீடாபிஷேகஞ் செய்தாற்போல மேன்மையை விளைக்கு மென்க. "கோலமா மென்சென் னிக்கு உன் கமலமன்ன குரைகழலே," "மாலடிமுடிமேற் கோலமாங் குலசேகரன்" எனப் பெரியாரும் பணித்தார். மற்றும், "முடிசூட்டி" என்றதன் ஆற்றலால், திருவடி மல ரென்றவாறுமாம். வளவிலையாக் கொண்ட - ஒன்றுக்கு இரண்டாக மிக்கவிலைகொடுத்துப் பிரியத்துடன்வாங்கிய பொருளாக ஏற்றுக்கொண்ட என்றபடி. மங்கலகுணங்கள் - யாவர்க்கும் சுபகரமான ஸௌந்தர்யம் ஸௌசீல்யம் ஸௌலப்யம் வாத்ஸல்யம் ஸ்வாமித்வம் முதலியன. எம்பெருமான் அநந்த கல்யாணகுண பரிபூர்ண னாதலால், மங்கல குணங்கட்கு ஓரளவில்லாத ஐயனே யென்றார். |