"வணங்குந்துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பாற், பிணங்குஞ்சமயம் பலபலவாக்கியவையவைதோறு, அணங்கும்பலபலவாக்கி நின்மூர்த்திபரப்பி வைத்தாய்" என்றபடி, ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர்க்கு ஏற்ப, ஒன்றோடொன்றுமாறுபடுகிற பலபலமதக்கோட்பாடுகளையும், பலபலதெய் வங்களையும், பலபல உபாசனைவகைகளையும் எம்பெருமான் அமைத்துவைத் தன னாதலால், அவரவர்கூறும் வண்ணம் உள்ளபொருளும் இல்லாதபொருளும் உருவப்பொருளும் அருவப்பொருளும் ஆகுவன் அவனென்க. 'பிரமாணமுமில்லை பிரமேயமுமில்லை, ஸர்வமும் சூந்யம்; ஆகையாலே, வேதமும் ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை' என்று ஸர்வசூந்யவாதிகள் சொன்னால், அவரால் இல்லையெனப்படுகிற அபாவபதார்த்தமும் பகவானதுசொரூபமேயாம் என்பது சித்தாந்தம். உரு - ஸ்தூலரூபவஸ்து. அரு - நாமரூபங்களில் லாத சூக்ஷ்மரூபவஸ்து, "உளனெனி லுள னவனுருவ மிவ்வுருவுக, ளுளனலனெனி லவனருவ மிவ்வருவுக, ளுளனென விலனென விவைகுண முடைமையி, லுள னிருதகைமையொ டொழிவிலன் பரந்தே" என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் சம்பிரதாயார்த்தம் இங்குக் கொள்ளத்தக்கது. (99) 100. | ஒருபாலமரரொருபான்முனிவருடனிருந்தெ | | னிருபார்வையுங்கொண்டுவப்பதென்றோ விடபக்கிரிக்கும் | | பொருபாற்கடற்குமயோத்திக்கும்பொற்றுவராபதிக்கு | | நிருபா வைகுந்தமுநீவீற்றிருக்கின்றநீர்மையுமே. | (இ - ள்.) இடபக்கிரிக்கும் - திருமாலிருஞ்சோலைமலைக்கும், பொருபால் கடற்கும் - (அலைகள்) மோதப்பெற்ற திருப்பாற்கடலுக்கும், அயோத்திக்கும் - திருவயோத்திக்கும், பொன் துவராபதிக்கும் - அழகிய திருத் துவாரகைக்கும், நிருபா - தலைவனே! - வைகுந்தமும் - ஸ்ரீவைகுண்டத்தையும், நீ வீற்றிருக்கின்ற நீர்மையும் - (அதில்) நீ எழுந்தருளியிருக்கின்ற அழகையும், ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவருடன் இருந்து என் இரு பார்வையும் கொண்டு உவப்பது - ஒருபக்கத்தில் நித்யசூரிகளுடனும் மற்றொரு பக்கத்தில் முக்தர்களுடனும் (யான்) கூடியிருந்து எனது இரண்டுகண்களை யுங்கொண்டு (சேவித்துப்) பரமாநந்தமடைவது, என்றோ - எந்நாளோ! இங்ஙனம் தமது ஆதரத்தைக் கூறியதனால், விரைவில் எனக்குப் பரமபதம் அளித்தருளவேணுமென்று பிரார்த்தித்தவாறாம். இருவினைப் பாசபந்தத்தினுட்பட்டு இப்பொழுது பத்தாத்மாவாயிருக்கிற யான் அந்தப் பந்தம் ஒழிந்து வீடுபெற்று முக்தனாகி அங்கு நித்யமுக்தர்களின் கோஷ்டிநடுவே யிருந்து ஸ்ரீவைகுண்டநாதனைத் தரிசித்துக் கிருதார்த்தனாவது எப்பொழுதோ? என்றார். இது இப்பிரபந்தத்தின் ஈற்றுச்செய்யு ளாதலால், இதில், தமது முக்கியமான பிரார்த்தனையை வெளியிட்டு, அவ்வளவோடு இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார். மரணமில்லாதவ ரென்று பொருள்படும் "அமரர்" என்ற வடசொல், இங்கு, நித்யசூரிகளைக் குறித்தது; திருவாய்மொழியில் "அயர்வறு மமரர்கள்" என்றவிடத்துப் போல: அவராவார் - பிறப்பு இறப்பு இல்லாமல் எம்பெரு |