மான்போலவே என்றும் ஒருநிலையாகப் பரமபதத்தில் வாழ்கிற அநந்தகருட விஷ்வக்ஸேநர் முதலியோர்; இவர்கள் முற்காலத்தும் நிரந்தரமான பகவ தநுபவத்தை யுடையவர்கள். மநநசீலர் (அதாவது கடவுளை எப்பொழுதுந் தியானிப்பவர்) என்று பொருள்படுகிற "முனிவர்" என்ற சொல், இங்கு முக்தர்களைக் குறித்தது; அவராவார் - இவ்வுலகங்களிற் கருமவசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பையொழித்து முத்திபெற்றவர். இவ்விருதிறத்து அடியவருமே பரமபதத்திலுள்ளார். எம்பெருமானது ஐவகைநிலைகளுள், அர்ச்சை, வியூகம், விபவம் என்ற வற்றை உட்கொண்டு 'இடபக்கிரிக்கும் பாற்கடற்கும் அயோத்திக்கும் துவ ராபதிக்கும் நிருபா' என்று விளித்தார். இவற்றில், அர்ச்சை - விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்; அங்ஙனம் எழுந்தருளியிருக்குந் திவ்வியதேசங்கள் பலவற்றுள்ளும் இங்குத் தலைமைபற்றி, இடபகிரி எடுத்துக் கூறப்பட்டது. வ்யூஹமாவது - வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை. விபவமாவது - மத்ஸ்யாவதாரம் முதலிய அவதாரங்கள்; அவை பலவற்றுள்ளும், தலைமை பற்றி, இராமகிருஷ்ணாவதாரங்கள் இங்குக் கூறப்பட்டன; "மாநீரயோத்தி வணபூந்துவரை" என்றார் திருவரங்கத்தந்தாதியிலும். அயோத்தி - அயோத்யா என்ற வடசொல்லின் விகாரம்; அது, (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாததென்று காரணப்பொருள்பெறும். துவராபதி - த்வாரவதீ என்ற வடசொல்லின் விகாரம். (100) | அலங்காரருக்குப் பரமச்சுவாமிக் கழகருக்குக் | | கலங்காப்பெருநகரங்காட்டுவார்க்குக் கருத்தன்பினா | | னலங்காதசொற்றொடையந்தாதியைப் பற்பநாபப்பட்டன் | | விலங்காதகீர்த்திமணவாளதாசன் விளம்பினனே. | (இ - ள்.) அலங்காரருக்கு பரமச்சுவாமிக்கு அழகருக்கு - அலங்கார ரென்றும் பரமஸ்வாமியென்றும் அழகரென்றும் திருநாமங்களை யுடையவ ரும், கலங்கா பெரு நகரம் காட்டுவார்க்கு - அழிவில்லாத பெருமையுடைய ஸ்ரீவைகுண்ட நகரத்தை(த் தமது அடியவர்கட்கு வாழுமிடமாக)க் காண் பித்தருள்பவருமாகிய எம்பெருமான் விஷயமாக, - கருத்து அன்பினால் - மனத்திற்கொண்ட மெய்யன்பினால், - நலங்காத சொல் தொடை அந்தாதியை - (காலபேதத்தால்) வாடுதலில்லாத சொன்மாலையாகிய இந்த அந்தா திப்பிரபந்தத்தை, பற்பநாபப்பட்டன் விலங்காத கீர்த்தி மணவாளதாசன் - ஸ்ரீமந்நாராயணனது திருவவதாரமான பெரியபட்டரை (ஆசிரயித்து அவரைவிட்டு) நீங்காதிருத்தலாகிய புகழையுடைய அழகியமணவாளதாசன், விளம்பினன் - விண்ணப்பஞ்செய்தான்; (எ - று.) பரமச்சுவாமியென்பது அழகர்க்கு ஒருதிருநாமமாதலை, "நேமியம்பரம சாமிவாழி," "பிரமர்போற்றிய பரமசாமி" என்ற அழகர்கலம்பகத்தாலும் அறிக. பரமஸ்வாமீ என்ற வடமொழிப்பெயர், சிறந்த தலைவனென்று பொ |