டாது) நேராக நிறுத்தி, திருவல்லிக்கேணியான் - திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய, கண்ணன் - கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது, சீர் - கீர்த்தியை, புரிந்து புகன்மின் - விரும்பிக் கூறுங்கள்; புகன்றால் - அவ்வாறு புகழ்ந்துகூறினால், (அது), - கரு வல்லிக்கு - கருப்பமாகிய கொடிக்கு, மருந்து ஆம் - (நசிக்கச்செய்யும்) ஒளஷதமாம்; மா கதிக்கு - சிறந்த முத்தியுலகத்துக்கு, ஏணி ஆம் - (ஏறிச்செல்லுதற்குஉரிய) ஏணியாகும்; (எ - று.) மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணியி லெழுந்தருளிய திருமாலின் கீர்த்தியை யெடுத்துக்கூறினால், அது கொழுந்தோடிப்படர்கின்ற கர்ப்பபரம்பரைகளை நீக்கி முத்திநெறியிலேறுதற்கு எளியஉபாயமாகு மென்பதாம். கருவல்லிக்கு மருந்து - பிறப்புக்களை இனி உண்டாகவொட்டாது தடுக்குந் திவ்யௌஷதம், கீழிடத்திலிருந்து மேலிடத்திலேறுதற்கு ஏணி இன்றியமையாக் கருவியாதல்போல நிலவுலகத்திலிருந்து மேலுலகமாகிய முத்தியுலகத்தி லேறுதற்குக் கண்ணபிரானது புகழ்கள் இன்றியமையாத உபாயமாமென்பது, 'ஏணியாம் மாக்கதிக்கு' என்றதன் கருத்து. கண்ணன் - பார்த்தசாரதியுமாம். இது - தொண்டைமான்சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத் தனது குடும்பத்தோடு சேவைசாதித்த தலம்; இத்தலத்துப்புஷ்கரிணி - அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணியென்று வடமொழியிலும், திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும். இந்தப் புண்ணியதீர்த்தத்தின்பெயரே இத்தலத்திற்கும் பெயராயிற் றென்க. இது மயிலையை யடுத்திருத்தலால், மயிலைத்திருவல்லிக்கேணி யெனப் பெயர்பெறும்;இம்மயிலையே பேயாழ்வாரது திருவவதாரஸ்தலமாம். (94) 22. திருக்கடிகை. | சீரருளானம்மைத்திருத்திநாமுன்னறியாக் | | கூரறிவுந்தந்தடிமைகொண்டதற்கே - நேரே | | யொருகடிகையும்மனமே யுள்ளுகிலாய் முத்தி | | தருகடிகைமாயவனைத்தான். | (இ - ள்.) மனமே - ! - சீர் அருளால் - சிறந்த திருவருளினால், நம்மை - , திருத்தி - நல்லவழியிற் செல்லுமாறு செய்து, நாம் முன் அறியா கூர் அறிவும் தந்து - நாம் இதற்குமுன்னே அறிந்திராத நுட்பமான அறிவையும் (நமக்குக்) கொடுத்து, அடிமை கொண்டதற்கு - (நம்மை) ஆட்கொண்டதற்காக, - முத்தி தரு கடிகை மாயவனை - (தன்னையடைந்தார்க்கு) நற்கதியையளிக்குந் திருக்கடிகையென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய எம்பெருமானை, நேரே - நேராக, ஒரு கடிகையும் - ஒரு நாழிகைப் பொழுதாவது, உள்ளுகிலாய் - நினைக்கமாட்டாய்; (எ - று.) - தான் - ஈற்றசை. எம்பெருமான் தனது நிர்ஹேதுக கிருபையினால் நம்மைத்திருத்தி நுண்ணியபகுத்தறிவைக்கொடுத்து நம்மையாட்கொண்டதற்காக, அப்பெருமா |