பக்கம் எண் :

856நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

னைச் சிறிதுபொழுதாவது சிந்திக்கலாமே! அதுவுஞ்செய்யாது செய்ந்நன்றி மறந்தவனாய் வாளா கிடக்கின்றனையே! இது என்ன துர்ப்புத்தி! என்று தமது நெஞ்சத்தின் நிலையை இகழ்ந்தவாறு, நம்மிடத்து நன்மை சிறிதுமில்லாதிருக்கையிலும் அவ்வெம்பெருமான் வலியக் கருணைசெய்து திருத்தி நம்மை அடிமைகொண்டதற்குக் கைம்மாறு - அப்பிரான்விஷயத்தில் உபகாரஸ்மிருதி செய்யவேண்டுவதன்றி, வேறுதொழிலின்று என்பது இங்குப் போதரும்.

ஒருவர் ஒருகடிகைப்பொழுது இத்தலத்தி லுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்கு மாதலால், இத்தலத்திற்குக் கடிகையென்று திருநாமம்; கடிகாசல மெனப்படும். இது, சோளதேசம்போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல்பற்றி, சோளஸிம்ஹபுரமென்றும் வழங்கப்பெறும். சோளஸிம்ஹராஜனது புர மெனினுவாம்.

(95)

தொண்டைநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

வடநாட்டுத்திருப்பதிகள் - 12.

1. திருவேங்கடம்.

தானேசரணமுமாய்த் தானேபலமுமாய்த்
தானேகுறைமுடிக்குந்தன்மையான் - றேனேய்
திருவேங்கடந்தொழுதேந் தீயவிபூதிக்குண்
மருவேங் கடந்தனெமிவ்வாழ்வு.

(இ - ள்.) தானே -, சரணமும் ஆய் - உபாயமாகியும், தானே -, பலமும் ஆய் - உபேயமாகியும், தானே குறை முடிக்கும் தன்மையான் - தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது, தேன்ஏய் திருவேங்கடம் - தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை, தொழுதேம் - வணங்கினோம்; (அதன்பயனாக), தீய விபூதிக்குள் - கொடிய இந்தலீலாவிபூதியில், மருவேம் - இனிப் பொருந்த மாட்டோம்; இ வாழ்வு - இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை, கடந்தனெம் - இனிக் கடந்துவிட்டோம்; (எ - று.)

எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும், அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார். இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம். த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை 'தீயவிபூதி'