என்றார். கடந்தனெம் - தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி. (96) 2. திருச்சிங்கவேள்குன்றம். | வாழ்குமரன்மேற்கனகவஞ்சகன்மேலோர்முகத்தே | | சூழ்கருணையும்முனிவுந்தோன்றியவாற் - கேழ்கிளரு | | மங்கவேள்குன்றவழல்சரபத்தைப்பிளந்த | | சிங்கவேள்குன்றத்தினார்க்கு. | (இ - ள்.) கேழ் கிளரும் - நிறம்விளங்குகின்ற, அங்கம்வேள் - அழகிய தேகத்தையுடைய மன்மதன், குன்ற - சாம்பலாயழியும்படி, அழல் - (தனது நெற்றிக்கண்ணைத்திறந்து) கோபித்த, சரபத்தை - (சிவபிரானது அவதாரமாகிய) சரபமென்னும் விலங்கை, பிளந்த - பிளந்துஅழித்த, சிங்கவேள்குன்றத்தினார்க்கு - சிங்கவேள்குன்றமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய நரசிங்கப்பிரானுக்கு, வாழ் குமரன்மேல் - கடவுளினருள்பெற்ற பிரகலாதனென்னும் சிறுவனிடத்து, ஓர் முகத்து - ஒருபால், சூழ் கருணையும் - நிறைந்த பேரருளும், - கனகம் வஞ்சகன்மேல் - (அவனதுதந்தையான) வஞ்சனைக்குணமுடைய இரணியன்மீது, (ஓர்முகத்து - ஒருபால்), முனிவும் - கடுங்கோபமும், தோன்றிய - உண்டாயின; (எ - று.) ஏ, ஆல் - ஈற்றசைகள். தனதுமெய்யடியானான பிரகலாதனை இரணியன் வருத்தியதுபற்றி அன்னான்மீது பெருஞ்சினமும், பெற்றதந்தை தன்னைப் பலவாறாக நலியவும் அந்நிலையிலும் தனது மெய்யன்பு மாறாமலிருந்ததுபற்றிப் பிரகலாதாழ்வான்மீது திருவருளும் நரசிங்காவதாரமூர்த்திக்கு ஒருங்கே தோன்றின வென்க; இவ்வாறு ஒன்றற்குஒன்று மாறான குணங்களை ஒருங்கே எம்பெருமான்கொண்டது, அப்பிரானது ஆஸ்சர்யகுணயோகத்தை விளக்கும். சரபம் - இரண்டுதலைகளையும் சிறகுகளையும் கூரியநகமுள்ள எட்டுக்கால்களையும் மேல்நோக்கியகண்களையு முடைய தொரு மிருகவிசேடம்; இதனைப் பறவையென்றலு முண்டு. இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந் திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்க மாதலாலும், ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடையபுருஷோத்தமனது அவதாரமான திவ்யஸிம்ஹ மாதலாலும், இது சரபத்தைக் கொன்றிட்டது. இரணியனென்ற பெயர் பொன்னிறமானவ னென்று பொருள்படுதலால், அதன்பரியாயநாமமாக 'கனகன்' என்றார்; இரணியம் கனகம் என்பன - பொன்னின் பெயர்கள். முதலடியில் முறைநிரனிறைப்பொருள்கோள் காண்க. சிங்கமாகிய யாவரும் விரும்பப்படுகின்ற கட்டழகுடைய பெருமான் எழுந்தருளிய திருமலையாதலால், சிங்கவேள்குன்றம் என்று இத்தலத்திற்குப் பெயர்; 'சிங்கவேழ்குன்றம்' என்று வழங்குதலு முண்டு; அப்போதைக்கு நரசிங்கமூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்ற ஏழுகுன்றங்களையுடையது எனப்பொருள் காண்க; இதுவே அஹோபில மெனப்படும். (97) |