3. திருவயோத்தி. | ஆர்க்குமிதுநன்றுதீதானாலுநெஞ்சேநீ | | பார்க்கும்பலகலையும்பன்னாதே - சீர்க்குஞ் | | திருவையோத்திப்புயலைச் சீரியமெய்ஞ்ஞானத் | | துருவை யோத்திற்பொருளை யோர். | (இ - ள்.) நெஞ்சே - (எனது) மனமே! - இது - (யான்சொல்லுகின்ற) இவ்விஷயம், ஆர்க்கும் நன்று - எல்லோர்க்கும் நல்லதே; தீது ஆனாலும் - (ஒருகால்அதனால்) தீமையேநேர்வதானாலும், - நீ -, பார்க்கும் பல கலையும் - (உலகத்திற்) காணப்படுகின்ற பலவகைச்சாஸ்திரங்களையும், பன்னாது - கண்டபடி கற்காமல், சீரிய மெய் ஞானத்து உருவை - சிறந்த தத்துவஞான சொரூபியானவனும், ஓத்தின் பொருளை - வேதத்தின் அர்த்தமாகி யிருப்பவனுமாகிய. சீர்க்கும் திரு ஐயோத்தி புயலை - சிறப்புப்பொருந்திய திருவயோத்தியென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளிய காளமேகம்போலக் கருநிறமுடைய ஸ்ரீராமபிரானை, ஓர் - தியானிப்பாயாக; (எ - று.) தர்க்கம் வியாகரணம் முதலிய உலகத்துச்சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பலபகலும்போக்காமல், தத்துவஞானஸ்வரூபியாகிய கடவுளையே தியானஞ் செய்வாயாக என்று மனத்திற்கு உபதேசித்தனரென்க. உலகத்துவழங்குகின்ற சாஸ்திரங்களிற் பயிலுதல் வேதத்தின்நுண்ணியபொருளை உணர்தற்பொருட்டே யாதலாலும், வேதப்பொருளாகிய கடவுளையறியாது மற்றைச்சாஸ்திரங்களிற் பயில்வது பயனற்றதாதலாலும் அதனை விட்டு வேதப்பொருளாகிய கடவுளைத் தியானித்தலே சிறந்த செயலாகுமென்பதாம். அன்றியும், கலைகளிற்பயிலுதல் மிகவும்வருத்தமாயிருத்தலோடு புத்தியில்நிஷ்கர்ஷம் தோன்றாமல் புத்திசலித்தற்குங் காரணமாயிருத்தலால் அதனைநீத்து, கடவுளை உபதேசத்தினா லுணர்ந்து வழிபடுக வென்று போதித்தன ரென்க; "ஸாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஸம் - புத்தே: சலநகாரணம் : உபதேஸாத் ஹரிம் புத்வா - விரமேத்ஸர்வகர்மஸு" என்ற மேற்கோள் இங்கு உணரத்தக்கது. கடவுளைத் தியானித்தலென்பது அனைவர்க்குங்கடமை யாதலால் 'ஆர்க்கும் இதுநன்று' என்றும், அவ்வாறு செய்தலில் தீதுஒன்றுமில்லை யென்பதை வற்புறுத்துதற்பொருட்டு 'தீதானாலும்' என்றும் கூறினர். திருவயோத்தியென்பது - திரிபுநோக்கி, திருவையோத்தி என வந்தது. ஓதப்படுதலினால், வேதத்திற்கு ' ஓத்து' எனப்பெயர். அயோத்தி - பகைவர்களாற் போர்செய்து வெல்லமுடியாதது எனப்பெயர் பெறும்: அரண்முதலியவற்றால் மிக்கபாதுகாவலையுடையது என்பது கருத்து; இது, ஸ்ரீராமபிரானது திருவவதாரஸ்தலம்: முத்திதரும் நகரமேழனுள் ஒன்று. (98) 4. திருநைமிசாரணியம். | ஓரறிவுமில்லாதவென்போல்வார்க்குய்யலாம் | | பேரறிவுண்டேனும்பிறர்க்கரிது - பாரறிய | | நைம்மிசாரண்ணியத்துநாதரடியாரோடு | | மிம்மிசார்வுண்டாயினால். | |