பக்கம் எண் :

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி859

(இ - ள்.) பார் அறிய - உலகத்தார் அறியும்படி, நைம்மிசாரண்ணியத்து நாதர் அடியாரோடும் - திருநைமிசாரணியத்தி லெழுந்தருளிய ஸர்வஸ்வாமியினது பக்தர்களோடும், இம்மி சார்வு உண்டாயினால் - கொஞ்சமாவது சம்பந்தம் ஏற்படுமேயாயின், - ஓர் அறிவும் இல்லாத - சிறிதேனும் அறிவில்லாத, என் போல்வார்க்கு - என்னைப்போன்றவர்கட்கும், உய்யல் ஆம் - ஈடேறுதல் கூடும்; பிறர்க்கு - (அவ்வாறு பாகவதசம்பந்தம்பெறாத) மற்றையோர்க்கு, பேர் அறிவு உண்டு ஏனும் - விசேஷஞானம் உளதாயினும், அரிது - (ஈடேறுதல்) முடியாத காரியமாகும்; (எ - று.)

வீடுபேற்றுக்கு அறிவு பிரதானகாரண மன்று; பாகவத சம்பந்தமே முக்கியமானகாரண மென்பதாம். "ஜ்ஞாந அநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே அமைகிறாப்போலே" என்கிற ஸ்ரீவசநபூஷணமும், "பகவலலாபஹேதுவான தத்வஜ்ஞாநமும், ததநுரூப (அந்தஞானத்திற்குஏற்ற) அநுஷ்டாநமு மின்றிக்கே யொழிந்தாலும் பகவல்லாபத்துக்கு "பஸுர்மநுஷ்ய: பக்ஷீவா - யேசவைஷ்ணவஸம்ஸ்ரயா:) தேநைவதேப்ரயாஸ்யந்தி - தத்விஷ்ணோ:பரமம்பதம் (பசுவாயிருந்தாலும் மநுஷ்யனாயிருந்தாலும் பக்ஷியாயிருந்தாலும் யாராயிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவர்களை யாஸ்ரயித்தவர் - அந்தஸம்பந்தத்தினாலேயே அந்தவிஷ்ணுவினுடைய பரமபதத்தைச் சார்வர்)" என்றும், "யம்யம்ஸ்ப்ரூஸதிபாணிப்யாம் - யம்யம்பஸ்யதி சஷுஷா ஸ்தாவராண்யபிமுச்யந்தே - கிம்புநர்பாந்தவா ஜநா: (விஷ்ணுபக்தன துஸ்பர்ஸம் நேரிட்டாலும் பார்வைக்கு இலக்கானாலும் ஸ்தாவரங்களும் மோக்ஷம் பெறும்; அப்படியிருக்க, பந்துக்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?)" என்றும் சொல்லுகிறபடியே பாகவதஸம்பந்தமே நிரபேக்ஷஸாதநமாகிறாப்போலே" என்ற அதன்வியாக்கியானமும் இங்குக் காணத்தக்கன. (பாகவதர்கட்கு இடைவழியில் இளைப்புத்தீருமாறு நிழல்கொடுத்து உதவின புளியமரமொன்று ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவருளால் முத்திபெற்ற வரலாறு இங்குக் கருதத்தக்கது.)

ஒருகாலத்தில் முனிவர்கள் 'தவஞ்செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?' என்று தங்களுக்கு விளக்கிக்காட்டுதற்பொருட்டுப் பிரமனை வேண்டியபோது, அம்முனிவர்க்கு, அப்பிரமதேவன் தான் ஒருதருப்பை யாழியைச்செய்து மண்ணுலகத்திலுருட்டி அதுசென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால், அதற்கு இடமான இத்தலம் நைமிச மெனப் பெயர்பெற்றது. நைமிசம் - நேமிவிழுந்த இடம்.

(99)

5. திருச்சாளக்கிராமம்.

உண்டாமுறைமையுணர்ந்தடிமைப்பேர்பூண்டேன்
பண்டாங்குடிகுலத்தாற்பன்மதத்தாற் - கொண்டாட்டா
லாளக்கிராமத்தாலல்லற்பேர்பூணாமற்
சாளக்கிராமத்தார்தாட்கு.

(இ - ள்.) பண்டு ஆம் - தொன்று தொட்டுவருகிற, குடி (ஆல்) - குடியினாலும், குலத்தால் - குலத்தினாலும், பல் மதத்தால் - பலவகையாகவுள்ள