மதத்தினாலும், கொண்டாட்டால் - (தாம்தாம்செய்யுந் தொழில்முதலியவற்றாலுண்டாகின்ற) ஏற்றத்தினாலும், ஆள் அ கிராமத்தால் - உரிமைகொண்டு வசிக்கிற தம்தமதுகிராமத்தினாலும், அல்லல் பேர் பூணாமல் - துன்பத்திற்கு இடமாகிய பெயரை வைத்துக்கொள்ளாமல், - சாளக்கிராமத்தார் தாட்கு - சாளக்கிராமமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியுள்ள திருமாலினது திருவடிகளோடு, உண்டாம் - பொருந்திய, முறைமை - சம்பந்தத்தை, உணர்ந்து - ஆராய்ந்து தெரிந்துகொண்டு, அடிமை பேர் - (அப்பெருமானுக்கு) அடியவனென்கின்ற பேரை (தாஸ்யநாமத்தை), பூண்டேன் - வைத்துக்கொண்டேன்; (எ - று.) குடி முதலியவற்றால் வருகின்ற பேர்கள் அகங்காரத்திற்கே இடனாகி அழிதற்கே யுரியனவாதலோடு தாமும் நிலையாதன வாதலால் அவற்றை நல்லாசிரியரது உபதேசம் முதலியவற்றால் அறநீத்து, ஆத்மாவுக்கு நிலைநின்ற பேராகிய ஸ்ரீவைஷ்ணவதாஸனென்கின்ற அடிமைப்பேரைப் பூண்டு கொண்டே னென்று தாம் நல்லுணர்ச்சிபெற்றிருத்தலை இப்பாசுரத்தால் தெரிவிக்கின்றன ரென்க. "அஹங்காரமாகிற ஆர்ப்பை (மாலிந்யத்தை)த் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியா னென்றிற. க்ராம குலாதிகளால் வரும் பேர் அநர்த்தஹேது" என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்கள் இங்குக் கருதத்தக்கன. குடி குலம் முதலியவற்றால் வரும் பெயர்கள் உடலைப்பற்றி வருவன வாதலால், அவற்றிற்கும் ஆத்துமாவுக்கும் யாதொரு தொடர்பு மில்லாது நின்று உடலொழியும்போது அவை தாமும் ஒழியும்; ஆகலான், அவற்றால் ஆத்மாவுக்கு எவ்வகைப்பயனும் விளையாது; அடிமைப்பேரோ என்றும் உளதாகையால் அதனையுணர்ந்து பூண்டோர்க்கு எம்பெருமானதுபேரருள் சித்திக்கு மென்க. இங்ஙனம் குலம்குடி முதலியவற்றால் வரும் பேர்கள் கேவலம் அகங்காரத்திற்கே காரணமாய் ஸ்வரூப ஹாநியையு முண்டாக்கு மென்பார் 'அல்லற்பேர்' என்றார். குடியென்பது - பிறந்த வமிசம்; குடியால்வரும் பேராவன - கந்தாடையார் ப்ரதிவாதிபயங்கரத்தார் சக்கரவர்த்தியார் என்றாற் போல்வன. குலம் - வர்ணம்; குலத்தால்வரும் பேராவன - பிராமணன் க்ஷத்திரியன் என்றாற் போல்வன. மதத்தால் வரும் பேராவன - சைவன் வைஷ்ணவன் என்றாற் போல்வன. கொண்டாட்டால்வரும் பேராவன - சதாவதானி மஹோபாத்யாயன் சமயகோளரி மகாபண்டிதன் என்றாற் போல்வன. ஈகிராமத்தால் வரும் பேராவன - திருமலையார் நாவற்பாக்கத்தார் என்றாற் போல்வன. (100) 6. திருவதரியாச்சிரமம். | தாட்கடிமையென்றுதமையுணரார்க்கெட்டெழுத்துங் | | கேட்கவெளியிட்டருளுங்கேசவனை - வேட்கையொடு | | போவதரிதானாலும் போய்த்தொழுவோ நெஞ்சமே | | மாவதரியாச்சிரமத்து. | (இ - ள்.) நெஞ்சமே - (எனது) மனமே! - தாட்கு - (தனது) திருவடிகட்கு, அடிமை என்று - அடிமைப்பட்டவ ரென்று, தமை - தங்களது ஸ்வ |