ரூபத்தை, உணரார்க்கு - அறியாத இவ்வுலகத்தவர்க்கு, எட்டு எழுத்தும் - (ஆத்மாவினது ஸ்வரூபத்தை உள்ளபடிஉணர்த்துவதான) திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தை, கேட்க - காதிற்படும்படி, வெளியிட்டு அருளும் - கருணையோடு வெளியிட்ட, கேசவனை - திருமாலை, - போவது அரிது ஆனாலும் - யாத்திரைசெய்வது வருத்தமுடையதாயிருந்தாலும், மா வதரியாச்சிரமத்து - சிறந்தபதரிகாச்சிரம மென்னுந் திவ்வியதலத்தில், வேட்கையொடு - பக்தியுடனே, போய் -, தொழுவோம் - வணங்குவோம்; (எ - று.) முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற்பொருட்டு நரனென்னும் ஸிஷ்யனும், நாராயணனென்னுங் குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் திருமால் தோன்றி, சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளி, தன்னை உணராத உலகோர்க்குத் தான் அறிந்ததொடர்பையே பற்றாசுஆகக்கொண்டு ஈடேறுதற்கு ஏற்ற வழியைக் காட்டியருளியதனால், அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற தலம்போய்த் தொழுதற்கு அரியதாயிருந்தாலும், அப்பிரான்செய்த உபகாரஸ்மிருதியால் அங்கு அருமைப்பட்டாயினுஞ் சென்று அப்பிரானைத் தொழுது உய்வுபெற வேண்டுமென்று தமதுநெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றன ரென்க. "நரநாரணனா யுலகத்தறநூல், சிங்காமைவிரித்தவன்" என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும், "ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரகைங்கர்யத்தையுமிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ் சேரும்படி தானே ஸிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான். ஸிஷ்யனாய் நின்றது, ஸிஷ்யனிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக" என்ற முழுக்ஷுப்படியும் இங்குக் காணத்தக்கன. திருமாலால் வெளியிடப்பட்ட திருமந்திரம் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி காட்டவல்ல தென்பார் 'தமையுணரார்க்கு எட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவன்' என்றார். எட்டெழுத்து - திருவஷ்டாக்ஷரம். பதரிகாஸ்ரமம் என்ற வடசொல் திரிந்துவந்தது; (பதரி - இலந்தை மரம்.) இலந்தைமரங்களடர்ந்த ஆஸ்ரமமென்பது, பொருள்; இது - இமயமலையிலுள்ளது; அதுபற்றியே, "போவதரிதானாலும்" என்றார். (101) 7. திருக்கங்கைக்கரைக்கண்டம். | மத்தாற்கடல்கடைந்துவானோர்க்கமுதளித்த | | வத்தா வெனக்குன்னடிப்போதிற் - புத்தமுதைக் | | கங்கைக்கரைசேருங்கண்டத்தாய் புண்டரிக | | மங்கைக்கரைசே வழங்கு. | (இ - ள்.) மத்தால் - (மந்தரமலையாகிய) மத்தினாலே, கடல் கடைந்து - திருப்பாற்கடலைக்கடைந்து, வானோர்க்கு - தேவர்களுக்கு அமுது அளித்த - அமிருதத்தைக் கொடுத்தருளிய, அத்தா - தலைவனே! புண்டரிக மங்கைக்கு அரைசே - செந்தாமரைமலரில் வாழ்கின்ற பெரியபிராட்டியார்க்குத் |