பக்கம் எண் :

862நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

தலைவனே! கங்கை கரைசேரும் கண்டத்தாய் - கங்கைநதிக்கரையிற்பொருந்திய கண்டமென்னுங் கடிநகரி லெழுந்தருளியிருப்பவனே! - எனக்கு - அடியேனுக்கு, உன் அடி போதின் புது அமுதை - உனது திருவடித்தாமரையில்) தோன்றுகின்ற புதிய அமிருதத்தை, வழங்கு - கொடுத்தருள்வாயாக; (எ - று.)

இதனால், ஐயங்கார், எம்பெருமானை நோக்கி, உனது திருவடிகளின் போக்யதையை அனுபவிக்குமாறு எனக்கு நல்லறிவைத்தந்தருள்வாயென்று பிரார்த்திக்கின்றனர். "தேனேமலருந் திருப்பாதம்," "விஷ்ணோ: பதே பரமேமத்வஉத்ஸ: (விஷ்ணுவினது சிறந்ததிருவடிகளிலே தேனின்பெருக்கு உள்ளது)" என்றபடி எம்பெருமானது திருவடிகளில் போக்யதை விஞ்சியிருக்குமென்க. பாற்கடலைக் கையினால் வருந்திக் கடைந்து அதனினின்று எழுந்த அமிருதத்தைப் பிரயோஜநாந்தரபரரான தேவர்கட்குக் கொடுத்தது போலன்றி, அநந்யப்ரயோஜநனான அடியேனுக்கு உன் திருவடிகளினிடத்து இயற்கையாகவேயுள்ள இனிமையைத் தருவது மிகவும் எளிதாகு மென்ற கருத்து, 'மத்தாற் கடல்கடைந்து வானோர்க்கு அமுதுஅளித்த அத்தா! எனக்கு உன்னடிப்போதிற் புத்தமுதை வழங்கு' என்ற தொடரில் தோன்றும் அமுதம் வேண்டுமென்று பிரார்த்தியாத தேவர்கட்கு அதனை உண்டாக்கியளித்த நீ அதனைவேண்டுகின்ற எனக்கு இயற்கையாக உன்னிடத்திலுள்ள அதனை அளிக்கலாகாதோ? சமயம் வந்தபோதுமாத்திரம் காலைக்கட்டிக் காரியங்கொண்டு மற்றைச்சமயங்களில் விலகிநிற்பவர்க்குத்தான் உதவவேண்டுமோ? எப்போதும் உன்னையே அணுகிநின்று உன்னாலல்லது மற்றையாவராலும் ஒன்றுங்குறைவேண்டாத எனக்கு உதவலாகாதோ? என்பவை முதலிய கருத்துக்களும் இங்குத்தொனிக்கும். புத்தமுதுஎன்றது - எத்துணைக்காலம் அனுபவித்தாலும் தெவிட்டுதலில்லாது மேன்மேலும் இன்சுவைபயப்பதும், 'தேவாமிருதம்போல அசுரர்கள் கைக்கொள்ளப்புகுகிறார்களே!' என்று அஞ்சவேண்டாததுமாகிய அமிருத மென்றபடி.

இத்தலம் இப்பொழுது தேவப்ரயாகை யென்று வழங்குகின்ற தென்பர். புண்டரீகமங்கையென்பது - இத்தலத்துநாச்சியார்திருநாமம்.

(102).

8. திருப்பிருதி.

வழங்குமுயிரனைத்தும்வாரிவாய்ப்பெய்து
விழுங்குங்குகவந்தன்விறற்றோட் - கிழங்கைப்
பொருப்பிருதிக்குங்கிடந்தாற்போற்றுணித்துவீழ்த்தான்
றிருப்பிருதிக்கென்னெஞ்சேசெல்.

(இ - ள்.) என் நெஞ்சே - எனது மனமே! - வழங்கும் உயிர் அனைத்தும் - சஞ்சரிக்கின்ற எல்லாப்பிராணிகளையும், வாரி - (தனது இரண்டு கைகளாலும் ஒருசேரத்) திரட்டியெடுத்து, வாய் பெய்து - (தனது) வாய்க்குள் தள்ளி, விழுங்கும் - விழுங்குந்தன்மையுள்ள, கவந்தன் - கபந்தனென்னும் அசுரனது, விறல் தோள் கிழங்கை - வலிமையுள்ள தோள்களின் மூலபாகத்தை, பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் - மலை இரண்டுபக்கத்திலும்