பக்கம் எண் :

864நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

இது - ஸ்ரீகிருஷ்ணபகவானது திருவவதாரஸ்தலம்; முத்திதரும் நகரமேழனுள் இதுவும்ஒன்று. கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மதுவென்ற அசுரனை யழித்த இடமாதலாலும், இதற்கு மதுரையெனப் பெயர்வந்ததென்பர்.

(104)

10. திருத்துவாரகை.

திறந்திறமாத்தாந்துய்க்குந்தீஞ்சுவையைநாடி
யறந்திறம்பிப்பாதகரோரைவர் - நறுந்துளவ
மாதுவரையோனே மனந்துணையாக்கொண்டென்னைக்
காதுவரையோமெய்கலந்து.

(இ - ள்.) நறுந் துளவம் - நறுமணமுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த, மா துவரையோனே - பெருமைபெற்ற துவாரகையென்னுந் திவ்வியதலத்தை வாழுமிடமாகக்கொண்டவனே! - பாதகர் ஓர் ஐவர் - மிகக்கொடிய பாதகங்களைச் செய்வதற்குக் காரணமாய்நிற்கின்ற பஞ்சேந்திரியங்கள், திறம்திறம் ஆ - விதம்விதமாக, தாம் துய்க்கும் - தாம் அனுபவித்தற்கு உரிய. தீஞ்சுவையை - இன்சுவையுள்ளபொருள்களை, நாடி - தேடிக்கொண்டு, அறம் திறம்பி - தருமமார்க்கத்தினின்று தவறி, மனம் துணை ஆ கொண்டு - (எனது) மனத்தை(த் தமக்கு) உற்றதுணையாகக்கைக்கொண்டு, மெய் கலந்து - எனது உடலிற் பொருந்தி, என்னை -, காதுவர் - இடைவிடாது வருத்துவார்கள்; ஐயோ -! (எ - று.)

"மனமாளு மோரைவர்" என்றபடி கொடிய பஞ்சேந்திரியங்கள் மனத்தைத் தமக்கு உற்றதுணையாகக்கொண்டு சரீரத்திற்கு உள்ளாகவே இருந்து தம்தமக்குஉரிய விஷயங்களில் விரும்பி என்னுயிரை வருத்திக் கொல்கின்றன; இவற்றை உனது அருளென்னுந் தண்டா லடித்து வலியொடுக்கி நற்கதி யளிக்கவேண்டுமென்பதாம். எம்பெருமான் சேதநர்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு ஈடேறுதற்பொருட்டே கரணகளேபரங்களை அவர்கட்கு அளித்திருக்க, இந்திரியங்கள் அவ்வெம்பெருமானை வழிபடுதற்கு இசையாது மனத்தைத் துணைக்கொண்டு வேறுவழியிற் செல்லுதலால் "பாதகர்ஓரைவர் அறந்திறம்பிக் காதுவர்' என்றார். பஞ்சேந்திரியங்கள் புறம்பே விலகிநின்றால் ஒருவாறு உய்தல்கூடும்; உள்ளேபுகுந்து உற்றதுணைவர் போன்று உயிரை வருத்துதலால், உய்யும் வகை யில்லை யென்பது, 'காதுவ ரையோ மெய்கலந்து' என்பதன் கருத்து; "புறப்பகைகோடியின் மிக்குறினு மஞ்சார், அகப்பகையொன்றஞ்சிக் காப்ப" என்றது காண்க. 'திறந்திறமாத் தாம்துய்க்குந் தீஞ்சுவை' என்றது - மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களைத் தமக்கு விஷயமாகக் கொண்டிருத்தலால் என்க. செறலினால் 'ஐவர்' என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்.

துவரை - த்வாரகா என்ற வடசொல்லின் சிதைவு; அகன்ற துவாரத்தையுடையது எனக் காரணப்பொருள்படும். இதுவும் முத்திதரும் நகரமேழனுள் ஒன்று. இந்நகரம் - காலயவனன் பெருஞ்சேனையோடு வடமது