ரையை முற்றுகைசெய்தபோது அவனால் யாதவர்க்கு எங்குத் தீங்குவருமோ? என்ற கருத்தினால் ஸ்ரீகிருஷ்ணபகவான் சமுத்திரத்தினிடையே அவ்யாதவரைப் பாதுகாக்குமாறு ஏற்படுத்தி அரசாண்ட நகரம். "பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரையென்னு, மதில் நாயகராகிவீற்றிருந்த மணவாளர்" என்பது, பெரியார்பாசுரம். (105) 11. திருவாய்ப்பாடி. | கலந்தமரரோடுங்கரைகண்டாரோடும் | | பொலிந்துதிருநாட்டிருக்கப்போவீர் - மலிந்தபுக | | ழண்டராய்ப்பாடியமலரடியாரடியார் | | தொண்டராய்ப்பாடித்தொழும். | (இ - ள்.) (உலகத்தவர்களே!) - மலிந்த புகழ் - நிறைந்த கீர்த்தியையுடைய, அண்டர் - இடையர்கள்வாழ்கின்ற, ஆய்ப்பாடி - திருவாய்ப்பாடி யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்ற, அமலர் - குற்றமற்ற கண்ணபிரானது, அடியார் அடியார் தொண்டர் ஆய் - தாஸஅநுதாஸர்க்கு அடிமைப்பட்டவராய், பாடி - (அவரது குணங்களைப்) பாடி, தொழும் - (அவரை) வணங்குங்கள்; (அவ்வாறு வணங்கினால்), - அமரரோடும் - நித்ய ஸூரிகளோடும், கரைகண்டாரோடும் - (இவ்வுலகத்தினின்று) அக்கரை சேர்ந்தவரான முக்தர்களோடும், கலந்து - ஒருசேரக்கலந்து, பொலிந்து - சிறப்புப்பெற்று, திருநாடு - பரமபதத்தில், இருக்க - அழிவின்றி இருக்கும்படி, போவீர் - செல்வீர்கள்; (எ - று.) திருமால் ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்து விளையாடின இடமாகிய திருவாய்ப்பாடியி லுள்ள அடியாரின் அடியார்கட்கு அடியவராகி அவரது குணங்களைப் பாடித் துதித்தால், அதன்பயனாக, நீங்கள் ஸ்ரீவைகுண்டலோகத்தில் அநாதியாய் வாழ்கின்ற நித்யஸூரிகளோடும் ஸம்ஸாரத்தினின்று வீடுபெற்றுச்சென்ற முக்தரோடும் ஒருகோவையாகக்கலந்து பேராநந்தமநுபவிக்கப்பெறுவீ ரென்று உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு: இச்செய்யுளால், பாகவதசேஷத்தின் சிறப்பைக் கூறின ரென்க. அமரர் - என்றும் மரணமில்லாதவர்; நித்யஸூரிகள் எனப்படுவர்; அவராவார் - அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர். கரைகண்டோர் - எம்பெருமானது நிர்ஹேதுககிருபையினால் தத்துவஞானம் தோன்றப்பெற்று ஸாம்ஸாரிகஸகலபாபங்களையும் ஒழித்து முக்தியிற் சேர்ந்தவர்கள்; "கரைகண்டோர், துளக்கமில்லாவானவர்" என்றார் நம்மாழ்வாரும். இங்கு கலை கண்டார், என்ற பாடம் சாஸ்திரங்களில்வல்லவரெனப் பொருள்படுமாயினும, இனிதுபொருந்தாமை உணர்க. அண்டர் ஆய்ப்பாடி அமலர் என்பதற்கு - இடையர்களது ஆய்ப்பாடியில் தோன்றிய குற்றமற்ற பாகவதர் என்றும், அண்டராகிய ஆய்ப்பாடியமல ரென்றும் பொருள் கூறினுமாம். ஆய்ப்பாடி - இடையர்கள்வசிக்கின்ற சேரி யெனப் பொருள்படும்; 'கோகுலம்' என்று வடமொழியில் வழங்கப்பெறும். (106) |