12. திருப்பாற்கடல். | தொழும்பாயநானல்லசூதறிந்துகொண்டேன் | | செழும்பாயலைமுத்தஞ்சிந்தி - முழங்குந் | | திருப்பாற்கடலான்றாள்சேர்ந்தாரடிசேர்ந் | | திருப்பாற்கடலாமிடர். | (இ - ள்.) தொழும்பு ஆய - (எம்பெருமானுக்கு) அடியவனாகிய, நான் - நல்ல சூது - நல்ல உளவை, அறிந்து கொண்டேன் -; (அதாவது), - செழும்பாய் அலை - செழித்த பாய்கின்ற அலைகளினால், முத்தம் சிந்தி - முத்துக்களைக் கொழித்து, முழங்கும் - ஒலிக்கின்ற, திருப்பாற்கடலான் - திருப்பாற்கடலென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய க்ஷீராப்திநாதனது, தாள் - திருவடிகளை, சேர்ந்தார் - உபாயமாக அடைந்த பாகவதர்களது, அடி - திருவடிகளை, சேர்ந்து இருப்பாற்கு - தஞ்சமாகப்பற்றிக் கவலையற்று இருப்பவனுக்கு, இடர் - பிறவித்துன்பங்களையெல்லாம், அடல் ஆம் - ஒழித்தல் எளிதிற்கூடும் (என்பதே) ; (எ - று.) பாகவதர்களின் திருவடிகளை யாச்சிரயித்தலே பிறவித்துன்பங்கள் யாவும் ஒழிந்து எளிதில் ஈடேறுதற்கு உரிய உபாயமென்பதனை யான்அறிந்து கொண்டு கடைப்பிடிக்கலானே னென்பதாம். அற்பச்செயலாற் பெரும்பேறு சித்திக்கும் உபாய மாதலால், "நல்லசூது' என்றார். எம்பெருமானது ஐவகை நிலைகளுள், திருப்பாற்கடலி லெழுந்தருளியிருப்பவன் வியூகமூர்த்தியாவன்; "வ்யூஹமாவது - ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும், உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும் ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ரூபணே நிற்கும் நிலை". (107) வடநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.திருநாட்டுத்திருப்பதி - 1. | இடருடையேன்சொல்லவெளிதோபிரம | | னடரும்விடையோற்குமரிதே - தொடருங் | | கருவைகுந்தம்பிறவிக்கட்டறுத்துமீளாத் | | திருவைகுந்தம்பெறுவார்சீர். | (இ - ள்.) தொடரும் - (இருவினைப்பயன்காரணமாகத்) தொடர்ந்து வருவதும், கரு வைகும் - கர்ப்பத்தினிடத்திற் பிரவேசிப்பதற்குக் காரணமானதுமான, தம் பிறவி கட்டு - தமது ஜந்மபந்தத்தை, அறுத்து - (எம்பெரு மானது திருவருளால் அடியோடு) ஒழித்து, மீளா - (தன்னிடத்துச்சேர்ந்த வர்கள்) திரும்பிவருதலில்லாததாகிய, திரு வைகுந்தம் - ஸ்ரீவைகுண்ட லோகத்தை, பெறுவார் - அடையப்பெறுபவர்களது, சீர் - சிறப்பானது, - பிரமன் - பிரமதேவனுக்கும், அடரும் விடையோற்கும் - போர்செய்யுந் |