தன்மையுள்ள ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானுக்கும், அரிது - சொல்லமுடியாதது; (என்றால்), - இடர் உடையேன் - ஸம்ஸாரத்தில் மிகவும் உழலுகின்ற யான், சொல்ல - புகழ்ந்து கூறுதற்கு, எளிதோ - எளியதாகுமோ? (எ - று.) "முதலாவார் மூவர்" என்றபடி திருமாலோடு சேர்த்து எண்ணப்படு கின்ற பிரமருத்திரராகிற மற்றையிருமூர்த்தியராலுமே ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்த முக்தர்களின் பெருமை சொல்லமுடியா தென்றால், கேவலம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற ஜ்ஞாநஹீநனான என்னால் எவ்வாறு சொல்லப் போகு மென்பதாம்; இங்குக் கைமுதிகநியாயத்தினால் (கைமுதிகநியாய மாவது - ஓர்எலி தண்டத்தை விழுங்கியதென்றால் அதிற்கட்டப்பட்டிருந்த அபூபமும் - (பக்ஷணமும்) விழுங்கியமை பெறப்படுவதுபோல்வது.) பிரமருத்திரர்க்கே திருவைகுந்தம் பெறுவார் சீர் சொல்ல அரிதாயின் என்னால் எவ்வாறு சொல்ல முடியு மெனக் கூறியது - தொடர்நிலைச் செய்யுட்பொருட் பேறணியாம். இது - திருமாலினது ஐவகைநிலையகளுள் பரத்வம் விளங்குந் தானம். "பரத்வமாவது - அகால கால்யமான நலமந்தமில்லதோர்நாட்டிலே நித்ய முக்தர்க்குப் போக்யனாய்க்கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு." இதுவே - பரமபதமெனவும், நித்தியவிபூதி யெனவும்படும். (108) திருநாட்டுத்திருப்பதி முற்றும். | மண்ணிலரங்கமுதல்வைகுந்தநாடளவு | | மெண்ணுதிருப்பதிநூற்றெட்டினையு - நண்ணுவார் | | கற்பார்துதிப்பார்கருதுவார்கேட்டிருப்பார் | | பொற்பாதமென்றலைமேற்பூ. | (இ - ள்.) மண்ணில் அரங்கம் முதல் - நிலவுலகத்திலுள்ள திருவரங்கம் பெரியகோயில் முதலாக, வைகுந்தம் நாடு அளவும்- பரமபதநாடு வரையிலும், எண்ணு திருப்பதி நூற்றெட்டினையும் - நன்குமதிக்கப்படுகின்ற நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளையும், நண்ணுவார் - சென்று சேர்பவர்களும், கற்பார் - (வாயினாற்) சொல்லுபவர்களும், துதிப்பார் - தோத்திரஞ்செய்பவர்களும், கருதுவார் - மனத்தினால் நினைப்பவர்களும், கேட்டு இருப்பார் - (பிறர் சொல்லக்) கேட்டிருப்பவர்களுமாகிய பரமபாகவதர்களது, பொன்பாதம் - அழகிய திருவடிகள், என் தலைமேல் பூ - நான் முடிக்கு அணியாகச் சூடும் மலர்களாகும்; (எ - று.) நூற்றெட்டுத்திருமால்திருப்பதிகளைப்பற்றி யாத்திரைமுதலியன செய்கின்ற அடியவர்களது திருவடித்தாமரைகளை முடிமேற்கொள்வே னென்பதாம். "நூலோதி வீதி, வாழியெனவருந்திரளை வாழ்த்துவார்தம் மலரடிஎன் சென்னிக்கு மலர்ந்தபூவே" என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது. |