பிராட்டியார், மார்பில் ஆட - (தேவரீரது) மார்பில் அசையாநிற்கவும், - தென் அரங்க மணவாளர் - தெற்கின்கணுள்ள திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ - று.) கான்பூத்ததனிச்செல்வன்சிலை - இந்திரதநுசு. பல நிறங்களையுடைய இந்திரதநுசு - பலவகையிரத்தினங்களினாலியன்ற வாசிகைக்கும், கருமுகிலில் தோன்றும் மின்னல் - அத்திருமாலினதுமார்பில்தோன்றுகின்ற பெரிய பிராட்டியார்க்கும் உவமை. (3) 4. | பூசுரரும்புரவலரும்வானநாட்டுப் | | புத்தேளிர்குழுவுமவர்பூவைமாரும் | | வாசவனுமலரயனுமழுவலானும் | | வணங்குவானவசரம்பார்த்திணங்குகின்றார் | | தூசுடையகொடித்தடந்தேர்மானந்தோன்றச் | | சுடரிரண்டும்பகல்விளக்காத்தோன்றத்தோன்றுந் | | தேசுடையதிருவரங்கராடிரூசல் | | சீரங்கநாயகியோடாடிரூசல். | (இ - ள்.) பூசுரரும் - பூமியில் தேவர்போல விளங்குகின்ற பிராமணரும், புரவலரும் - காத்தல்தொழிலில்வல்ல அரசர்களும், வானம் நாட்டுபுத்தேளிர் குழுவும் - வானுலகத்தவரான தேவர்களின் கூட்டமும், அவர் பூவைமாரும் - அத்தேவர்களது மனைவியரும், வாசவனும் - (அத்தேவசாதியார்க்குத்தலைவனான) தேவேந்திரனும், மலர் அயனும் - (திருமாலின்நாபித்) தாமரைமலரில் தோன்றி பிரமதேவனும், மழு வலானும் - மழுவென்னும் ஆயுதத்தை யேந்திய சிவபிரானும், (ஆகிய இவர்கள்யாவரும்), வணங்குவான் - (தேவரீரைத்) தொழுதற்காக, அவசரம் பார்த்து - சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டு, இணங்குகின்றார் - கூடுகின்றார்கள்; (அவர்கள்சேவிக்கும்படி), - தூசு உடைய கொடி தட தேர் - சீலையினாலியன்ற துவசங்கள் கட்டிய பெரியதேரின்மீதும், மானம் - விமானத்தின்மீதும், தோன்று - காணப்படுகின்ற, அ சுடர் இரண்டும் - (சூரியன் சந்திரன் என்ற) அந்த இருசுடர்களும், பகல் விளக்கு ஆ தோன்ற - பகற்காலத்தில் ஏற்றிய விளக்குப்போல (த் தேவரீரது ஒளிக்குமுன்னே) ஒளிமழுங்கும்படி, தோன்றும் - விளங்கிக்காணப்படுகின்ற, தேசு உடைய - பேரொளியையுடைய, திருவரங்கர் - ஸ்ரீரங்கநாதரே! ஊசல்ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ - று.) தேரின் மீது வருகின்ற சூரியனும், விமானத்தின் மீது வருகின்ற சந்திரனும், கோடிசூரியபிரகாசரான பெருமானது பேரொளிக்குமுன்னே பகல்விளக்குப்போலத் தோன்றுவ ரென்க. அ - உலகறிசுட்டு. மானம் - விமான மென்பதன் முதற்குறை. (4) 5. | மலைமகளுமரனுமொருவடந்தொட்டாட்ட | | வாசவனுஞ்சசியுமொருவடந்தொட்டாட்டக் | | கலைமகளுமயனுமொருவடந்தொட்டாட்டக் | | கந்தனும்வள்ளியுங்கலந்தோர்வடந்தொட்டாட்ட | |