பக்கம் எண் :

876சீரங்கநாயகரூசல்

வலைமகரப்பாற்கடலுளவதரித்த
        வலர்மகளுநிலமகளுமாயர்காதற்
றலைமகளுமிருமருங்கிலாடவெங்க
        டண்ணரங்கமணவாளராடிரூசல்.

(இ - ள்.) மலைமகளும் - பார்வதியும், அரனும் - (அவளதுகணவனான) சிவபிரானும், ஒரு வடம் தொட்டு ஆட்ட - ஒருசங்கிலியைப் பிடித்து ஆட்ட, - சசியும் - இந்திராணியும், வாசவனும் - (அவளதுகணவனான) இந்திரனும், ஒரு வடம் தொட்டு ஆட்ட -, - கலைமகளும் - சரசுவதியும், அயனும் - (அவளது கணவனான) பிரமனும், ஒரு வடம் தொட்டு ஆட்ட -, - வள்ளியும் - வள்ளியம்மையும், கந்தனும் - (அவளதுகணவனான) சுப்பிரமணியமூர்த்தியும், கலந்து - ஒன்றுகூடி, ஓர் வடம் தொட்டு ஆட்ட -, - அலைமகரம் பாற்கடலுள் அவதரித்த அலர்மகளும் - அலைகளையும் சுறாமீன்களையுமுடைய திருப்பாற்கடலில் (கடைந்தபோது) தோன்றியவளாகிய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளும், நிலமகளும் - பூமிப்பிராட்டியும், ஆயர் காதல் தலைமகளும் - இடையராற் பெற்றுவளர்க்கப்பட்ட அன்பிற்குஉரிய தேவியாகிய நீளாதேவியும், இரு மருங்கில் ஆட - (தேவரீரது) இருபக்கத்திலும் உடனிருந்து ஆடும்படி, எங்கள் தண் அரங்கம் மணவாளர் - எமது குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -;

(5)

6.திருவழுதிவளநாடன்பொருநைச்சேர்ப்பன்
        சீபராங்குசமுனிவன்வகுளச்செல்வன்
றருவளருங்குருகையர்கோன்காரிமாறன்
        சடகோபன்றமிழ்வேதந்ததியர்பாடக்
கருணைபொழிமுகமதியங்குறுவேர்வாடக்
        கரியகுழல்கத்தூரிநாமத்தாட
வருகிருக்குந்தேவியர்களதுகொண்டாட
        வணியரங்கத்தெம்பெருமானாடிரூசல்.

(இ - ள்.) திரு வழுதி வளம் நாடன் - வளப்பமுள்ள பாண்டியநாட்டில் திருவவதரித்தவரும், பொருநை சேர்ப்பன் - தாமிரபர்ணிநதியின் கரையில் வாழ்பவரும், சீபராங்குசமுனிவன் - (அந்யமதஸ்தராகிய யானைகட்கு அங்குசம்போன்றிருத்தலால்) ஸ்ரீபராங்குசனென்று திருநாமம்பெற்ற யோகியும், வகுளம் செல்வன் - மகிழமலர்மாலையையணிந்த சிறப்புடையோரும், தரு வளரும் குருகையர் கோன் - மரச்சோலைகள் ஓங்கிவளர்தற்கு இடமான திருக்குருகூரி லுள்ளார்க்குத் தலைவரும், காரி மாறன் - காரியென்பவர்க்குத் திருக்குமாரராய் மாறனென்று ஒருதிருநாமம்பெற்றவரும், சடகோபன் - சடகோபனென்னுந் திருநாமமுடையவருமான நம்மாழ்வார் அருளிச்செய்த, தமிழ்வேதம் - வடமொழி வேதத்தின்சாரமாகித் தமிழ் மொழியினாலியன்ற திருவாய்மொழி முதலிய திவ்யபிரபந்தங்களை, ததியர்