| மருக்கொண்டகொன்றையான்மலரின்மேலான் | | வானவர்கோன்முதலானோர்மகுடகோடி | | நெருக்குண்டதாளரங்கராடிரூசல் | | நீளைக்குமணவாளராடிரூசல். | (இ - ள்.) இருள் கொண்டகருங் கங்குலிடையே - அந்தகாரம் மிகுந்த கரிய நடுராத்திரியில், கோவல் இடைகழியில் - திருக்கோவலூரிலுள்ள ஓர் இடைகழியிலே, "திரு கண்டேன் - இலக்குமியைக் கண்டேன், பொன்மேனி கண்டேன் - அழகிய திருமேனியைக் கண்டேன், திகழ் அருக்கன் அணி நிறமும் - விளங்குகின்ற சூரியன்போன்ற அழகிய திரு நிறத்தையும், திகிரி சங்கும் - (திவ்வியாயுதங்களாகிய) சக்கரத்தையும் சங்கத்தையும், (கண்டேன்-") என்ற - என்று பாடினவரும், கண்ட - (திரு முதலானவர்களை நேரில்) தரிசித்தவருமாகிய, பிரான் - தலைவரான பேயாழ்வாருடைய, ஏற்றம் - சிறப்புள்ள பிரபந்தத்தை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - மரு கொண்ட கொன்றையான் - வாசனையையுடைய கொன்றைமலர்மாலையைத் தரித்த சிவபிரானும், மலரின்மேலான் - தாமரைமலரில் வீற்றிருப்பவனாகிய பிரமனும், வானவர் கோன் - தேவராசனாகிய இந்திரனும், முதலானோர் - முதலிய அடியவர்களது, மகுடம் கோடி - கிரீடங்களின் வரிசைகள்; நெருக்குண்ட - (அந்தத் தேவர்கள் கீழ்வீழ்ந்து தேவரீரைச் சேவிக்கும்போது) நெருங்கப்பெற்ற, தாள் - திருவடிகளையுடைய, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; நீளைக்கு மணவாளர் - நீளாதேவிக்கு மணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ - று.) "திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் றிக", மருக்கனணிநிற முங்கண்டேன் - செருக்கிளரும், பொன்னாழிகண்டேன் புரிசங்கங்கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பாலின்று" என்பது, பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந்திருவந்தாதியின் முதற்பாசுரம். (9) 10. | நான்முகனைநாரணனேபடைத்தானந்த | | நான்முகனுநக்கபிரானைப்படைத்தான் | | யான்முகமாயந்தாதியறிவித்தேனென் | | றியார்க்கும்வெளியிட்டபிரானியல்பைப்பாடப் | | பான்முகமார்வளைநேமிபடைகள்காட்டப் | | பாசடைகடிருமேனிப்படிவங்காட்டத் | | தேன்முகமாமுளரியவயவங்கள்காட்டச் | | செழுந்தடம்போலரங்கேசராடிரூசல். | (இ - ள்.) 'நாரணனே - நாராயணனே, நான்முகனை - நான்கு முகங்களையுடைய பிரமதேவனை, படைத்தான் - சிருஷ்டித்தான்; அந்த நான்முகனும் - அந்தப் பிரமனும், நக்கபிரானை படைத்தான் - சிவபிரானைச் சிருஷ்டித்தான், (என்கிற இந்த அர்த்தவிசேஷத்தை), யான் - (எம்பெருமானது |