பக்கம் எண் :

880சீரங்கநாயகரூசல்

நல்லருளாலே தத்துவஞானம் உதிக்கப்பெற்ற) நான், முகம் ஆய் - (பிரசாரஞ்செய்வதில்) முக்கியனாய்க்கொண்டு, அந்தாதி - அந்தாதி யென்னும்பிரபந்தத்தினால், அறிவித்தேன் - (அஜ்ஞான உலகத்தோர்க்குத்) தெரிவிக்கலானேன்,' என்று - என்றுதொடங்கி, யார்க்கும் வெளியிட்ட - யாவர்க்கும் (தத்துவத்தை) வெளியிட்டருளிய, பிரான் - திருமழிசைப் பிரானது, இயல்பை - சிறந்த தன்மையுள்ள பிரபந்தங்களை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - பால் முகம் ஆர் வளை - பால்போன்ற வெண்ணிறத்தைக் கொண்டுள்ள சங்குபூச்சிகளும், நேமி - சக்கரவாகப் பறவைகளும், படைகள் - (தேவரீரது) திவ்வியாயுதங்களை, காட்ட - காட்டாநிற்கவும், பசு அடைகள் - பசிய தாமரையிலைகள், திருமேனி படிவம் காட்ட - (தேவரீரது) திருமேனிநிறத்தைக் காட்டாநிற்கவும், தேன் முகம் மா முளரி - தேனைக் கொண்ட சிறந்த தாமரைமலர்கள், அவயவங்கள் காட்ட - (தேவரீரது திருக்கை திருவடி முதலிய) திருவவயவங்களைக் காட்டாநிற்கவும், செழுந் தடம் போல் - செழித்த தடாகத்தை யொத்திருக்கிற, அரங்கேசர் - ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

"நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந், தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்முகமாய், அந்தாதிமேலிட்டறிவித்தே னாழ்பொருளைச், சிந்தாமற்கொண்மினீர் தேர்ந்து" என்பது, திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன்றிருவந்தாதியின் முதற்பாசுரம். இதுவன்றி, இவ்வாழ்வார் திருச்சந்தவிருத்தம் என்னும் பிரபந்தமும் அருளிச்செய்திருக்கின்றனர். "மாயக்கூத்தா வாமனா வினையேன்கண்ணா கண்கைகால், தூயசெய்ய மலர்களாச் சோதிச்செவ்வாய் முகிழதாச், சாயச் சாமத்திருமேனி தண்பாசடையாத் தாமரைநீள், வாசத்தடம்போல் வருவானே யொருநாள் காணவாராயே" என்ற பாசுரம் பின்னிரண்டடிகளில் கருதத்தக்கது.

(10)

11.மருளிரியமறமிரியவனைத்துயிர்க்கு
        மயலிரியவினையிரியமறையின்பாட
லிருளிரியவென்றெடுத்துத்தொண்டர்தங்க
        ளிடரிரியவுரைத்தபிரானிட்டம்பாட
வருளிரியவறமிரியவுலகையாண்ட
        வாடகத்தோனகம்பரனென்றபிமானித்த
பொருளிரியச்சொல்லிரியமார்வங்கீண்ட
        பொன்னிசூழ்திருவரங்கராடிரூசல்.

(இ - ள்.) அனைத்து உயிர்க்கும் - எல்லாச்சீவராசிகளுக்கும், மருள் இரிய - அஜ்ஞாநம் நீங்கவும், மறம் இரிய - கொடுமை நீங்கவும், மயல் இரிய - (அஜ்ஞாநத்தினால் விளைகின்ற) மதிமயக்கம் நீங்கவும், வினை இரிய - இருவினைகளும் நீங்கவும், மறையின் பாடல் - வேதத்தின் பொருளமைந்த பாடல்களை, இருள் இரிய என்று எடுத்து, - "இருளிரிய" என்றுதொடங்கி, தொண்டர்