தங்கள் இடர் இரிய - (அதனைப்பாடுகின்ற) அடியார்களது பிறவித்துன்பமெல்லாம் நீங்கும்படி, உரைத்த - (பிரபந்தத்தைத்) திருவாய்மலர்ந்தருளிய, பிரான் - குலசேகரப்பெருமாளுடைய, இட்டம் - விருப்பான பெருமாள் திருமொழியென்னும்பிரபந்தத்தை, பாட - (ததீயர்)பாடா நிற்க, - அருள் இரிய - கருணையில்லாமற்போக, அறம் இரிய - தருமம் விலகும்படி, உலகை ஆண்ட - மூவுலகங்களையும் (தானொருவனாகவே) தனியரசாட்சிசெய்த, ஆடகத்தோன் - இரணியன், அகம் பரன் என்று அபிமானித்த பொருள் இரிய - 'நான்தான் பரதேவதை' என்று செருக்கியிருந்த தன்மை ஒழியுமாறும், சொல் இரிய - (அப்பொருளுக்கு இடமாகிய) சொற்களும் ஒழியுமாறும், மார்வம்கீண்ட - (அவ்வசுரனது) மார்பத்தை (நரசிங்கரூபியாய்த்தோன்றிப்) பிளந்தழித்த, பொன்னிசூழ் திருவரங்கர் - காவேரிநதியினாற் சூழப்பெற்ற திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ - று,) "இருளிரியச் சுடர்மணிகளிமைக்குநெற்றி யினத்துத்தியணிபணமாயி ரங்களார்ந்த, அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னு மணிவிளங்குமுயர் வெள்ளையணையைமேவித், திருவரங்கப் பெருநகருள், தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங், கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்றுகொலோ களிக்குநாளே" என்பது, குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள்திருமொழியின் முதற்பாசுரம். ஹாடகம் - பொன். நரசிங்கமூர்த்தியாய் இரணியாசுரனது மார்பைக் கீண்டமாத்திரத்தில் அகம்பர னென்ற சொல்லும் பொருளும் ஒழிந்தன வென்க. (11) 12. | அரனென்றுமயனென்றும்புத்தனென்று | | மலற்றுவார்முன்றிருநாரணனேயாதி | | பரனென்றுமறையுரைத்துக்கிழியறுத்த | | பட்டர்பிரான்பாடியபல்லாண்டுபாடக் | | கரனென்றமாரீசன்கவந்தனென்ற | | கண்டகராருயிர்மடியக்கண்டிலங்கா | | புரம்வென்றசிலையரங்கராடிரூசல் | | புகழுறையூர்வல்லியோடாடிரூசல். | (இ - ள்.) (பரதேவதை), அரன் என்றும் - சிவபெருமானே யென்றும், அயன் என்றும் - பிரமதேவனே யென்றும், புத்தன் என்றும் - புத்தனே யென்றும், அலற்றுவார் முன் - (இவ்வாறு தமக்குத்தோன்றியவாறெல்லாம் வாயினாற்) பிதற்றுகின்ற அந்யமதஸ்தர்கட்கு எதிரில், திருநாரணனே ஆதிபரன் என்று - 'ஸ்ரீமந்நாராயணனே முதலாகிய பரதேதைவ' என்று, மறை உரைத்து - (அதற்கு ஆதாரமாகிய) வேதபிரமாணங்களை எடுத்துக்கூறி, கிழி அறுத்த - (வல்லபதேவபாண்டியன் வித்யாசுல்கமாகக்கட்டிவைத்த) பொற்கிழியை அறுத்துக்கொண்ட, பட்டர்பிரான் - (அவ்வாறு அந்யமதஸ்தரரீன வித்துவான்களையெல்லாம் வென்றிட்டதனால்) பட்டர்பிரானென்று பட்டப் |