பக்கம் எண் :

882சீரங்கநாயகரூசல்

பெயர்பெற்ற பெரியாழ்வார், பாடிய - திருவாய்மலர்ந்தருளிய, பல்லாண்டு. 'திருப்பல்லாண்டு' என்னுந் திவ்யப்ரபந்தத்தை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - கரன் என்ற (கண்டகன்) - கரனென்று சொல்லப்பட்ட கொடியவனும், மாரீசன் கவந்தன் என்ற கண்டகர் - மாரீசன் கவந்த னென்ற கொடியவரும், ஆர் உயிர் மடிய கண்டு - அருமையான உயிர் மடியும்படி கொன்று, இலங்காபுரம் வென்ற - இலங்காபட்டணத்தைச் சயித்த, சிலை - (கோதண்டமென்னும்) வில்லையேந்திய, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; புகழ் உறையூர் வல்லியோடு - புகழ்பெற்ற உறையூர்நாச்சியாரோடு, ஊசல் ஆடிர் -; (எ - று.)

பல்லாண்டு - முதற்குறிப்பால், 'பல்லாண்டு' என்றுதொடங்கிய பிரபந்தத்தைக் காட்டும். இவர்பாடிய பிரபந்தங்கள் - திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும்.

(12)

13.மருமாலைப்பசுந்துளவத்தொடைகளோடு
        வைகறையில்வந்துதிருத்துயிலுணர்த்தித்
திருமாலைதிருவடிக்கேசூட்டிநிற்குந்
        திருமண்டங்குடிப்பெருமான்சீர்மைபாடப்
பெருமாலையடைந்துலகமதிமயங்கப்
        பேணாதார்படக்கதிரோன்காணாதேக
வொருமாலைபகலிலழைத்தொளித்தநேமி
        யொளியுள்ளாரரங்கேசராடிரூசல்.

(இ - ள்.) மரு மாலை - (திருமகளோடு) மருவியுள்ள திருமாலை, பசுந்துளவம் தொடைகளோடு - பசுமையாகிய திருத்துழாய்மாலையுடனே, வைகறையில் - விடியற்காலத்தில், வந்து - (சந்நிதிக்கு) வந்து, திருதுயில் உணர்த்தி - (திருப்பள்ளியெழுச்சிபாடித்) துயிலுணரச்செய்து, திரு மாலை - திருமாலையென்னுந் திவ்வியபிரபந்தத்தை, திருவடிக்கே சூட்டி நிற்கும் - திருவடிகளிற் சமர்ப்பித்துநிற்கின்ற, திருமண்டங்குடி பெருமான் - திருமண்டங்குடியில் திருவவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வாராது, சீர்மை - சிறப்புள்ள பிரபந்தங்களை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - உலகம் - உலகத்திலுள்ளார், பெரு மாலை அடைந்து - பெரிய மயக்கத்தை யடைந்து, மதி மயங்க - அறிவு கலங்கவும், பேணாதார் பட - பகைவர்கள் அழியவும், கதிரோன் காணாது ஏக - சூரியன் தோன்றாது மறையவும், ஒரு மாலை - ஓரிரவை, பகலில் - பகற்பொழுதிலே, அழைத்து - வருவித்து, ஒளித்த - (சூரியனை) மறைத்த, ஒளி நேமி உள்ளார் - கோடிசூரியபிரகாசமான திருவாழியாழ்வானை யுடையவராகிய, அரங்கேசர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

இனி, மருமாலைப்பசுந்துளவத்தொடைகளோடு - நறுமணமுள்ள மாலைகளாகிய திருத்துழாய்மாலைகளோடு என்று பொருளுரைப்பாருமுளர், தொண்டரடிப்பொடியாழ்வார், ஸ்ரீரங்கநாதனுக்குத் திருத்துளவத்தொண்டு செய்து வந்ததோடு, திருப்பள்ளியெழுச்சி, திருமாலை என்னுந் திவ்வியப்ரபந்தங்களையும்