பாடின ரென்க. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதாரஸ்தலமாகிய திருமண்டங்குடியென்னுந் தலம், சோழநாட்டில் கபிஸ்தலத்திற்கு வடகிழக்கேயுள்ளது. 'நிரவதிகதேஜோரூபமான திருவாழியாலே ஆதித்யனை மறைத்தாலும் லோகத்துக்கு மிகவும் வெளிச்சிறப்பு உண்டா மித்தனையன்றோ? ஆதித்யன் அஸ்தமித்தானென்னும்படி கண்களுக்கு இருண்டுதோற்றுவான் என்' என்னில், - இந்தஆதித்யனுடைய தேஜசு கண்ணாலே முகக்கலாம்படி அளவுபட்டிருக்கையாலே தமஸ்ஸு போம்படியாயிருக்கும்; அங்ஙனன்றிக்கே, திருவாழியாழ்வானுடைய தேஜசு நேர்கொடுநேர் கண்கொண்டு பார்க்கவொண்ணாதபடி மிக்கிருக்கையாலே பளபளத்துக் கண்ணையிருளப் பண்ணிற்று' என்ப வாதலால், 'ஒருமாலை பகலிலழைத்தொளித்த நேமியொளியுள்ளார்' என்றார். (13) 14. | காரங்கத்திருவுருவஞ்செய்யபாத | | கமலமுதன்முடியளவுங்கண்டுபோற்றச் | | சாரங்கமுனியையூர்ந்தமலனாதி | | தனையுரைத்தபாண்பெருமாடகைமைபாட | | வாரங்கொள்பாற்கடல்விட்டயனூரேறி | | யயோத்திநகரிழிந்துபொன்னியாற்றிற்சேர்ந்த | | சீரங்கமணவாளராடிரூசல் | | சீரங்கநாயகியோடாடிரூசல். | (இ - ள்.) கார் அங்கம் திருஉருவம் - காளமேகம்போன்ற திருவுருவத்தை, செய்ய பாத கமலம் முதல் - செந்நிறமாகிய திருவடித்தாமரையென்ற உறுப்புமுதல், முடிஅளவும் - திருமுடிவரையிலும், கண்டுபோற்ற - சேவித்துத்துதிக்கும்படி, சாரங்கமுனியை ஊர்ந்து - லோகசாரங்கமகாமுனிவர்மேல் ஏறிவந்து, அமலனாதிதனை உரைத்த - 'அமலனாதிபிரான்' என்று தொடங்கும் பிரபந்தத்தைப்பாடியருளிய, பாண்பெருமாள் - திருப்பாணாழ்வாரது, தகைமை - பெருமையுள்ள ('அமலனாதிபிரான்' என்னும்) பிரபந்தத்தை, பாட - (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, - ஆரம் கொள் பாற்கடல் விட்டு - முத்துக்களையுடைய திருப்பாற்கடலை விட்டுநீங்கி, அயன் ஊர் ஏறி - பிரமதேவனது நாடாகிய சத்தியலோகத்திற் சென்றிருந்து, அயோத்திநகர் இழிந்து - திருவயோத்தியில் இறங்கிச் சிலகாலம் வாழ்ந்து, (பின்பு), பொன்னி ஆற்றில் சேர்ந்த - உபயகாவேரியின் மத்தியிற் சேர்ந்த, சீரங்கமணவாளர் - ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ - று.) லோகசாரங்கமகாமுனிவர் திருவரங்கநாதனுக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துவரும்நாளில் ஒருகால் திருமஞ்சனங்கொணருமாறு தென்திருக்காவேரிக்குச் செல்லுகையில், வீணையுங் கையுமாய் மெய்ம்மறந்து ஸ்ரீரங்கநாதனைப் பாடிக்கொண்டிருந்த திருப்பாணாழ்வார் திருவடிகளில் அபசாரப்பட்டு, அந்தஅபசாரம் தீருமாறு ஸ்ரீரங்கநாதனது நியமனத்தால் அவ்வாழ்வாரைத் |