பக்கம் எண் :

884சீரங்கநாயகரூசல்

தமதுதோளின்மேலெழுந்தருளப்பண்ணிக்கொண்டு ஸ்ரீரங்கநாதனது திருமுன்பேவிட, அவ்வாழ்வார் "அமலனாதிபிரானடியார்க்கென்னையாட்படுத்த, விமலன்விண்ணவர்கோன்விரையார்பொழில் வேங்கடவன், நிமலன் நின்மலன் நீதிவானவன் நீண்மதிளரங்கத்தம்மான், திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றவே" என்று தொடங்கிப் பாதாதிகேசாந்தமாக அப்பிரானை அநுபவித்தனரென்க. பிரமதேவன் திருப்பாற்கடலினின்று ஆவாகநம்பண்ணிப்பிரதிஷ்டைசெய்த விஷ்ணுமூர்த்தியைத் திருவாராதனஞ்செய்து கொண்டிருக்க, பின்பு, சூரியவமிசத்துத்தோன்றிய இக்ஷ்வாகுமன்னன் அப்பிரமனிடத்தினின்று அப்பெருமானைப்பெற்றுத் திருவயோத்தியில் திருவாராதனஞ்செய்துவர, பிறகு குலமுறையாகத் தனக்குக்கிடைத்த அப்பெருமானை இராமபிரான் தனக்கு அந்தரங்கனான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தந்தருள, அவன் அப்பிரானை எழுந்தருள்வித்துக்கொண்டு தனது இலங்கைநோக்கிச் செல்லுகையில், அப்பெருமான் இடைவழியில் உபயகாவேரி மத்தியிலே புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினான்; அவ்விடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.

(14)

15. விழிபறித்துவெள்ளியைமாவலியைமண்ணும்
        விண்ணுலகும்பறித்தகுறள்வேடத்தும்மை
வழிபறித்துமந்திரங்கொண்டன்பர்தங்கள்
        வல்வினையைப்பறித்தபிரான்வண்மைபாடச்
சுழிபறித்தகங்கைமுடியடியிற்றோயத்
        தொழுதிரக்குமுக்கணனான்முகனைச்செய்த
பழிபறித்துப்பலியொழித்தாராடிரூசல்
        பள்ளிகொண்டதிருவரங்கராடிரூசல்.

(இ - ள்.) வெள்ளியை - சுக்கிராசாரியனது, விழி - ஒற்றைக்கண்ணை, பறித்து - (தருப்பைப்புல்நுனியாற்) குத்திக்கிளறி, மாவலியை - மகாபலிசக்கரவர்த்தியினிடத்தினின்றும், மண்ணும் - பூலோகத்தையும், விண் உலகும் - தேவலோகத்தையும், பறித்த - தன்னுடையனவாக்கிக்கொண்ட, குறள் வேடத்து - வாமநவடிவத்தையுடைய, உம்மை, தேவரீரை, வழிபறித்து - (மணவாளக்கோலத்தோடு திருமணங்கொல்லையிற்சென்றபோது) இடைவழியே மடக்கி (த் தேவரீரது) பொருள்களைக் கவர்ந்து, மந்திரம் கொண்டு - (தேவரீரிடத்தில்) திருமந்திரோபதேசம் பெற்றுக்கொண்டு, (அந்தத்திருமந்திரத்தினால்), அன்பர்தங்கள் வல் வினையை பறித்த - அடியார்களது கொடிய இருவினைப்பற்றையும் ஒழித்தருளிய, பிரான் - திருமங்கையாழ்வாரது, வண்மை சிறந்தபாடல்களை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - சுழி பறித்த கங்கை முடிசுழிகளினாற் கல்லுந் தன்மையுள்ள (சுழிகளையுடைய) கங்காநதியைத் தரித்த சிரசானது, அடியில் தோய - திருவடியிற் பொருந்தும்படி, தொழுது இரக்கும் - (தேவரீரை) வணங்கிப்பிரார்த்திக்கின்ற, முக்கணன் - மூன்றுகண்களையுடைய சிவபிரான், நான்முகனை செய்த - நான்குமுகங்களையுடைய பிரம