பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்885

னது சிரசைக் கொய்ததனா லுண்டாகிய, பழி - பிரமகத்திதோஷத்தை, பறித்து - நீக்கி, பலி ஒழித்தார் - (அச்சிவபிரான் தனது பிரமகத்திதீருமாறு செய்த) பிக்ஷாடநத்தைத் தீர்த்த நம்பெருமாளே! ஊசல் ஆடிர் -; பள்ளி கொண்ட திருவரங்கர் - (திருவநந்தாழ்வான்மீது) பள்ளிகொண்டருளிய திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திவ்யப்ரபந்தங்கள் - பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்னும் ஆறுபிரபந்தங்கள்; இவை - நம்மாழ்வார் நான்குவேதங்களின் சாரமாக அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்கட்கு ஆறுஅங்கம்போலு மென்பர். விழிபறித்து மண்ணும் விண்ணும் பறித்த தேவரீரிடத்துத் திருமங்கையாழ்வார் வழிபறித்து உலகோர் இருவினையைப் பறித்தார் என்னும் நயமும், மாவலியினிடத்து இரந்த தேவரீர் சிவபிரானது இரத்தலைப் போக்கினீர் என்னும் நயமும் கருதத்தக்கன. பறித்த என்ற சொல் ஒருபொருளிற் பலமுறை பயின்றுவந்தது - சொற்பொருட்பின்வருநிலையணியாம்.

(15)

16.போதனார்நெட்டெழுத்துநமனாரிட்ட
        குற்றெழுத்தும்புனலெழுத்தாய்ப்போகமாறன்
வேதமாயிரந்தமிழுமெழுதியந்நாண்
        மேன்மைபெறுமதுரகவிவியப்பைப்பாட
வோதமார்மீன்வடிவாயாமையேனத்
        துருவாகியரிகுறண்மூவிராமராகிக்
கோதிலாக்கண்ணனாய்க்கற்கியாகுங்
        கோயில்வாழரங்கேசராடிரூசல்.

(இ - ள்.) போதனார் நெட்டெழுத்தும் - தாமரைமலரில் வாழ்கின்ற பிரமன் விதித்துஎழுதிய நெட்டெழுத்தும், நமனார் இட்ட குற்றெழுத்தும் - யமன் எழுதிய குற்றெழுத்தும், புனல் எழுத்து ஆய் போக - நீரில் எழுதிய எழுத்துப்போல மறைந்து விடும்படி, - மாறன் வேதம்ஆயிரம் தமிழும் எழுதி - நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும் பட்டோலைகொண்டு எழுதி, (அதனால்), அ நாள் மேன்மை பெறு - அக்காலத்திற்பெருமைபெற்ற, மதுரகவி - மதுரகவிகளது, வியப்பை - கொண்டாடத்தக்க பாடல்களை, பாட - (ததீயர்) பாடா நிற்க, - ஓதம் ஆர் மீன்வடிவு ஆய் - கடலில் திரிகின்ற மத்ஸ்யத்தின் வடிவாகியும், ஆமை ஏனத்து உரு ஆகி - கூர்மம் வராகம் இவற்றின் உருவமாகியும், அரி குறள் மூ இராமர் ஆகி - நரஸிம்ஹமும் வாமநமும் பரசுராமரும் தசரதராமரும் பலராமரும் ஆகியும், கோது இலா கண்ணன் ஆய் - குற்றமில்லாத கிருஷ்ணனாகியும், கற்கி ஆகும் - கல்கியாகத் திருவவதரிக்கவும் போகின்ற, கோயில் வாழ் அரங்கேசர் - திருவரங்கம் பெரியகோயிலில் வாழ்கின்ற ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)