மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னுந் திவ்ய ப்ரபந்தத்தை நாதமுனிகள் பன்னீராயிரம்உரு தேவகானத்தாற் பாடி நம்மாழ்வாரது திருவருளைப் பெற்று அவர்முகமாகத் திருவாய்மொழி முதலானவற்றை யடைந்து உலகோர்க்கு உபகரித்தன ரென்க. நாதமுனி திருநாம நலங்கள் என்பதற்கு - நாதமுனிகளது திருநாமச்சிறப்பை யென்று பொருள்கூறினுமாம். (17) | 18. | வம்பமருஞ்சிகைமுந்நூறரித்தஞானி | | வாதியரைவெல்லாளவந்தார்க்கன்பா | | மெம்பெருமானார்க்கெட்டுமிரண்டும்பேசி | | யிதமுரைத்தபெரியநம்பியிரக்கம்பாடத் | | தும்புருநாரதர்நாதகீதம்பாடத் | | தொண்டர்குழாமியல்பாடச்சுருதிபாட | | நம்பெருமாடிருவரங்கராடிரூசல் | | நான்முகனார்தாதையாராடிரூசல். | (இ - ள்.) சிகை - குடுமியையும், முந்நூல் - யஜ்ஞோபவீதத்தையும், தரித்த -, வம்பு அமரும் - புதுமை பொருந்திய, ஞானி - தத்துவஞான முடையவராகிய,வாதியரைவெல் - (தம்மோடு) வாதஞ்செய்யவருபவர்களை யெல்லாம் வென்ற, ஆளவந்தார்க்கு - ஸ்ரீஆளவந்தாரிடத்தில், அன்புஆம்-பக்தியுடையவராகிய, எம்பெருமானார்க்கு-உடையவர்க்கு,எட்டும்- திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தையும், இரண்டும் - திருத்வயத்தையும், பேசி - உபதேசித்து, இதம் - நன்மைபயக்கத்தக்க சரமச்லோகத்தையும், உரைத்த - உபதேசித்த, பெரியநம்பி - பெரியநம்பியென்னும் ஆசாரியர் அருளிச்செய்த, இரக்கம் - (பகவானது) கிருபாவிசேஷத்தைத் தெரிவிக்கும் பாடல்களை, பாட - (ததீயர்) பாடாநிற்கவும், - தும்புரு நாரதர் - தும்புரு நாரதர் என்கின்ற இருவரும், நாத கீதம் பாட - இன்னோசையுள்ள கீதங்களைப் பாடவும், - தொண்டர் குழாம் - அடியார்களின் கூட்டங்கள், இயல் பாட - இயலுக்கென்று அமைந்த திவ்யப்ரபந்தங்களை யெடுத்துப்பாடவும், - (பின்னும் சில அடியார்களின் கூட்டங்கள்), சுருதிபாட - வேதபாராயணஞ்செய்யவும், - நம்பெருமாள் - நம்பெருமாளே! திருவரங்கர் - ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; நான்முகனார் தாதையார் நான்குமுகங்களையுடைய பிரமனுக்குத் தந்தையாரே! ஊசல் ஆடிர் -; (எ - று.) விஸிஷ்டாத்வைதஸந்யாஸிகள்மற்றைச்சன்னியாசிகள் போலவல்லாமல் சிகாயஜ்ஞோபவீதங்களைப் பெற்றிருப்ப ராதலால், அவ்வகையிற்சேர்ந்த ஸ்ரீஆளவந்தாரை "சிகை முந்நூல் தரித்த ஞானி' என்றார். வம்பமரும் ஞானிக்கு அடை, அவர் வாதியரை வென்றமையை, ஆக்கியாழ்வானை வென்று ஆளவந்தாரென்று பெயர். பெற்றவிடத்துங் காண்க. ஆளவந்தார் திருநாடலங்கரித்தபோது அவர்கொண்டிருந்த மூன்றுகுறைகளையும் எம்பெருமானார் நீக்கியவ ராதலால், "ஆளவந்தார்க்கன்பாமெம்பெருமானார்' என்றார். |