பக்கம் எண் :

888சீரங்கநாயகரூசல்

பெரியநம்பி ஸ்ரீராமாநுசனுக்குத் திருவிலச்சினைசாதித்துத் திருமந்திரம் யவற்றை உபதேசித்தன ராதலால், "எம்பெருமானார்க்கு எட்டு மிரண்டும் பேசி யிதமுரைத்த பெரியநம்பி' எனப்பட்டார். இங்குக் கூறியவற்றின் விவரங்களையெல்லாம் குருபரம்பாராப்ரபாவத்திற் பரக்கக்காணலாம். எட்டு இரண்டு என்பன - எண்ணலளவையாகுபெயர்கள். இதமுரைத்த என்பதற்கு - ஆத்மஹிதமான அர்த்தவிசேஷங்களை உபதேசித்த என்று பொருள்கூற இடமுண்டு. இயல்என்பது - இயற்பா; அன்றி, எம்பெருமானுக்கு முன்பு சேவிக்கப்படுகின்ற தமிழ்வேதபாராயணமுமாம். பெரியநம்பிஇரக்கம் - பெரியநம்பிகளது கிருபாவிசேஷத்தை, பாட - (ததீயர்) பாடாநிற்க என்று உரைத்தல் சாலும்

(18)

19.ஐங்கோலுமொருகோலுநீர்க்கோலம்போ
        லழியமுனிந்தறுசமயமகற்றியெங்கள்
செங்கோலேயுலகனைத்துஞ்செல்லமுக்கோ
        றிருக்கையிற்கொளெதிராசன்செயத்தைப்பாடச்
சங்கோலமிடும்பொன்னித்துறையினின்றே
        தவழ்ந்தேறிமறுகுதொறுந்தரளமீனு
நங்கோயினம்பெருமாளாடிரூசல்
        நக்கன்மூதாதையாராடிரூசல்.

(இ - ள்.) ஐங்கோலும் - (மன்மதனது) பஞ்சபாணங்களும், ஒருகோலும் - (அத்வைதஸந்யாஸிகட்குஉரிய) ஏகதண்டமும், நீர் கோலம் போல் அழிய - நீரிலிட்ட கோலம்போல அழியும்படி, முனிந்து - கண்டித்து, அறு சமயம் அகற்றி - (புறச்சமயங்களாகிய) ஷண்மதங்களையும் நிரஹித்து, - எங்கள் செங்கோலே - வைஷ்ணவர்களாகிய எங்களது செவ்விய ஆட்சியே (வைஷ்ணவமதமே), உலகு அனைத்தும் செல்ல - உலகமுழுதுஞ் சென்றுபரவும்படி, முக்கோல் திரு கையில் கொள் - திரிதண்டத்தைத் தமது திருக்கையிற் கொண்டுள்ள, எதிராசன் - ராமாநுஜமுனிவரது, செயத்தை - வெற்றியை, பாட - (ததீயர்) எடுத்துப்பாடாநிற்க, - சங்கு - சங்குப்பூச்சிகள், ஓலமிடும் பொன்னி துறையினின்று - ஒலிக்கின்ற காவேரியின் துறையிலிருந்து, தவழ்ந்து ஏறி - ஊர்ந்துஏறிவந்து, மறுகு தொறும் - தெருக்களிலெல்லாம் தரளம் ஈனும் - முத்துக்களைப் பெறுதற்கு இடமான, நம் கோயில் - நமது திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளியுள்ள, நம்பெருமாள் -! ஊசல் ஆடிர் -; நக்கன் மூதாதையார் - சிவபெருமானுக்குப் பாட்டனாரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

உடையவர் மன்மதபாணங்கட்கு இலக்காகாது விரக்தராய், அத்வைத நிரஸநம் செய்து வேதபாஹ்யமதங்களின் கொண்டாட்டத்தையும் ஒழித்து, உலகமெங்கும் வைஷ்ணவமதத்தைப் பரவச்செய்து தமது ஜயஸ்தம்பத்தை ஸ்ரீரங்கத்தில் நாட்டியமை முதலிரண்டடிகளில் விளக்கப்பட்டது. எதிராசன் செயத்தை என்பதற்கு - உடையவர் அருளிச் செய்த (எம்பெருமான்விஷய