பக்கம் எண் :

892சீரங்கநாயகரூசல்

சொரிந்த பூவோ - (தேவரீரைச்சேவிக்கின்ற) தேவர்கள் (மிக்கஅன்போடு) சொரிந்த மலர்களோ? - (இப்போதுஒளிப்பிழம்பாகத்தோன்றுவது), - உதித்து எழுந்த கலை மதியோ - உதயமாகிவிளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனோ? (அன்றி), உம்பர் மாதர் எடுத்திடு கர்ப்பூரம் ஆரத்தி தானோ - தேவமாதர்கள் (மங்களார்த்தமாக) எடுத்துச்சுழற்றிய கர்ப்பூர வாரத்தித்தட்டேயோ? யாம் தெளியோம் - யாம் இன்னதென்று உணர்ந்திலோம்; (இப்படிப்பட்ட பெருவிபவத்துடன்), இன்று - இப்போது, - நீள் திருக்கண் சாத்தி படுத்த - நீண்ட திருக்கண்கள் மூடி யோகநித்திரை செய்வதற்கு இடமான, திருப்பாற்கடலுள் நின்று - திருப்பாற்கடலிலிருந்து, போந்து - எழுந்தருளிவந்து, (சேவைசாதிக்கின்ற நம்பெருமாளே!) பாமாலை பூமாலை பாடி சூடி கொடுத்த - பாமாலைகளையும் பூமாலைகளையும் (முறையே) பாடியும் சூடியும் சமர்ப்பித்த, திருக்கோதையுடன் - ஸ்ரீஆண் டாளோடு, ஊசல்ஆடிர்-; கோயில் மணவாளரே - ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

இரவில் வானத்தில் தோன்றும் நக்ஷத்திரக்கூட்டங்களை உடுத்திரளோ? வானவர்கள் பக்தியோடு திருவரங்கநாதனுக்காகச் சொரிந்த பூத்திரளோ? என்று ஐயவணிதோன்றக் கூறினர். "உடுத்திரளோ வானவர்கள்சொரிந்த பூவோ' என்ற தொடர், "இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த வந்நாள், மறைமுறையால் வானாடர் கூடி - முறைமுறையின், தாதிலகிப் பூத் தெளித்தா லொவ்வாதே தாழ்விசும்பின், மீதிலகித் தான்கிடக்கும் மீன்"என்ற பாசுரத்தை ஒருவாறு ஒத்துவந்தது. இவ்வாறே, வானத்தில் தோன்றிய முழுமதியைத் தேவமாதர்கள் ஸ்ரீரங்கநாதனுக்கு மங்களார்த்தமாக எடுத்துச்சுழற்றிய கர்ப்பூரவாரத்தித்தட்டேயோ முழுமதியோ எனக் கூறினர். இந்தஐயவணியால், அந்தஎம்பெருமான் தேவர்களும் தேவமாதர்களும் வழிபடுமாறு உள்ளா னென்பது, தொனிக்கும். 

(23)

24.வென்றிவேற்கருநெடுங்கண்ண சோதைமுன்னம்
        வேர்வாடவிளையாடும் வெண்ணெயாட்டுங்
குன்றுபோனாற்றடந்தோள்வீசியாடுங்
        குரவைதனைப்பிணைந்தாடுங்கோளறாட்டு
மன்றினூடுவந்தாடுமரக்காலாட்டும்
        வலியரவிற்பாய்ந்தாடும்வடுவிலாட்டு
மன்றுகாணாவிழந்தவடியோங்காண
        வணியரங்கராசரேயாடிரூசல்.

(இ - ள்.) அணி அரங்கராசரே -! (நீர்), வென்றி வேல் கரு நெடுங் கண் - வெற்றி பெற்ற வேலாயுதம்போன்று கருமையாகி நீண்ட கண்களையுடைய, அசோதை - யசோதையினது, முன்னம் - எதிரில், வேர்வு ஆட - வேர்வை யுண்டாகும்படி, விளையாடும் - விளையாடின, வெண்ணெய் ஆட்டும் - வெண்ணெய்க்கு ஆடின கூத்தாட்டையும், - குன்றுபோல் - மலைகள்போல, நால்